ஏப்ரல் மாசத்துக்கும் யூடியூபுக்கும் என்ன சம்பந்தம்னா கேட்கறீங்க? வரலாறு முக்கியம் பாஸ்!

2025 ஆம் ஆண்டுக்குள் 30 வயதுக்குட்பட்டோரில் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கெனத் தனியான கேபிள், டிடிஹெச் போன்ற இணைப்புகளையெல்லாம் வைத்துக் கொள்ளவே போவதில்லை எல்லாம் யூ டியூபே கதி என்றாகப் போகிறது.
ஏப்ரல் மாசத்துக்கும் யூடியூபுக்கும் என்ன சம்பந்தம்னா கேட்கறீங்க? வரலாறு முக்கியம் பாஸ்!

யூ டியூபை நிறுவியர்கள் மூவர். சாட் ஹர்லி, ஸ்டேவ் சென், ஜாவத் கரீம் எனும் மூன்று நண்பர்களும் பே பால் நிறுவனத்தில் முன்னாள் ஊழியர்கள். இவர்களில் கரீமைத் தவிர மற்ற இருவரும் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள். சென்ற விவரத்தைக் கரீமிடம் பிறகு வந்து தெரிவிக்கிறார்கள். ஆனால், அதை கரீம் நம்பவில்லை. கரீமை நம்ப வைப்பதற்காக அந்த விருந்து நிகழ்வில் தாங்கள் இருந்த போது எடுத்த விடியோ பதிவை கரீமுக்கு அனுப்ப அவர்கள் முயல்கிறார்கள். அப்போது இ மெயில்களில் விடியோ இணைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட அந்த விடியோ பதிவை அவர்களால் கரீமுக்கு அனுப்ப முடியாமலாகிறது. இது தான் யூ டியூப் உருவானதற்கான ஆரம்பப் பொறி.

இதையடுத்து 2004, ஜனவரி 1 ஆம் தேதி சூப்பர் பவுல் என்றொரு லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் ஜாக்ஸனின் தங்கை ஜேனட் ஜாக்ஸனின் ஆடை விலகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகத்தினர் அந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிய விரும்பி அதற்கான விடியோ பதிவைத் தேடுகையில் அதுவும் அப்போது கிடைக்கவில்லை.

அதே போல 2004 ஆம் ஆண்டு சுனாமி விடியோ பதிவுகளைத் தேடும் போது அந்த விடியோ பதிவுகளும் மிஸ்ஸிங். இந்தக் காரணங்களையெல்லாம் முன் வைத்து முதன்முதலாக விடியோ பதிவுகளுக்கான ஒரு லைப்ரரி போலத்தான் யூ டியூப் தொடங்கப்பட்டுள்ளது. 

யூ டியூபை நிறுவியவர்களில் ஒருவரான ஜாவத் கரீம், தன் பள்ளித்தோழன் ஒருவனை ஒரு ஜூவில் வைத்து பதிவு செய்த 19 நொடி ஒளிப்படத்தை ‘ஜூவில் நான்’ என்ற தலைப்பில் யூ டியூபில் பதிவேற்றினார். இது தான் உலகின் முதல் யூ டியூப் பதிவாகக் கருதப்படுகிறது.

முதலில் நட்பை வளர்க்கும் டேட்டிங் அண்ட் சாட்டிங் தளங்களை முன்மாதிரியாகக் கொண்டு யூ டியூப் தளம் தொடங்கப்பட்டாலும் 2005 ஃபிப்ரவரி 14 அன்று யூ டியூப்.காம் என்ற முகவரி பதிவு செய்யப்பட்டது.

இதைத் தற்போது 130 கோடிப்பேர் பயன்படுத்துகிறார்களாம். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 300 மணி நேர ஒளிப்படங்கள் பதிவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறனவாம். ஒவ்வொரு நாளும் 3 கோடிப்பேர் வருகை தந்து 500 கோடி ஒளிப்படங்களைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள் என்கிறது கூகுள் சர்வே.

இன்றெல்லாம் ஜியோ டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை லைவ்வாக யூடியூபில் பார்க்கும் பழக்கமும் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், 2025 ஆம் ஆண்டுக்குள் 30 வயதுக்குட்பட்டோரில் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கெனத் தனியான கேபிள், டிடிஹெச் போன்ற இணைப்புகளையெல்லாம் எதிர்காலத்தில் வைத்துக் கொள்ளவே போவதில்லை என்று கூட ஒரு கணிப்பு சொல்கிறது. தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுபொறியாக யூ டியூப் மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com