மிஸ்டர் மற்றும் மிஸ் பப்ளிக் பொதுவெளியில் மாற்றிக் கொள்ள வேண்டிய அநாகரிகச் செயல்கள்
By DIN | Published On : 31st July 2019 11:36 AM | Last Updated : 31st July 2019 11:36 AM | அ+அ அ- |

- ரயில், பேருந்து நிலையங்களில் அமரும் இருக்கைகளில் லக்கேஜ்களை வைத்துக்கொண்டு பயணிகள் வந்தாலும் எடுக்காமல் இருப்பது.
- முதுகில் மாட்டிய குண்டான பையுடன் இரண்டு ஆள் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு மின்சார ரயில்களில் நிற்பதும், இடித்தபடி நடப்பதும்.
- சிக்னல்களில் ஒழுங்காக சிகப்பில் நின்று பச்சைக்குக் காத்திருப்பவர்களை கோமாளிகள் போல பார்த்தபடி சிக்னல் விதிகளை மீறுவதும், முதுகில் ஹாரன் அடித்து மிரட்டுவதும்.
- வீட்டின் பால்கனியிலிருந்து ஏதோ போட்டிவைத்ததுபோல குப்பை பைகளை குப்பைத் தொட்டி நோக்கி வீசி..மிகச் சரியாக தொட்டிக்குக் கீழே சிதறவிடுவது.
- வரிசைகளில் பலர் காத்திருக்க..அதி முக்கியஸ்தர்போல குறுக்கே நுழைந்து அதுவரை நிலவிய ஒழுங்குமுறையைக் கலைப்பது.
- பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருக்கும் காரை எப்படி எடுப்பார்கள் என்று யோசிக்காமல் முன்னாலும், பின்னாலும் இரு சக்கர வாகனங்களை இடைவெளியின்றி செருகி நிறுத்துவது.
- பொது இடங்களில் உள்ள வாஷ் பேசின்களில் கை கழுவுவதோடு, கிட்டத்தட்ட குளிப்பது.
- சூப்பர் மார்க்கெட்டுகளில் குழந்தைகளை மிக சுதந்திரமாக அவர்களையே பொருள்களை எடுக்க அனுமதித்து..அவை பொருள்களைத் தட்டிவிடுவதை ரசிப்பது.
- ரயில்களில், பஸ்களில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் முழுமையாக ஆக்கிரமித்து ஏகப்பட்டதை அடுக்கி, அடுத்த பயணிக்குரிய நியாயமான இடத்தையும் அனுமதிக்காமல் சண்டை வளர்ப்பது.
- திரையரங்குகளில் படம் ஓடும்போது..மற்றவர்களுக்கு செய்யும் இடைஞ்சல் என்று புரியாமல் அல்லது புரிந்தே போன் அழைப்புகளை ஏற்று சத்தமாகப் பேசுவது.
அநாகரிக அட்ராசிட்டீஸ்..நீங்களும் தொடரலாம்.
(பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் முகநூல் பதிவு)