வீக் எண்ட் ஜோக்ஸ்! சிரிங்க பாஸ்!
By DIN | Published On : 14th June 2019 04:27 PM | Last Updated : 14th June 2019 04:40 PM | அ+அ அ- |

'அந்த டாக்டர் பாவம்'
'ஏன்? நல்ல கூட்டம்தான் இருக்கே?'
'வர்றவங்க எல்லாமும் அவரை நலம் விசாரிச்சிட்டுப் போறாங்களாம்'
அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
''ஒரே ஜோக்கை உன் மாமியாரிடம் இரண்டு தடவை ஏன் சொன்னே?''
''முதல் தடவை சொல்லும்போது, "ஐயோ போதும் சிரிச்சு சிரிச்சு பாதி உயிர் போச்சு'ன்னு சொன்னாங்க. அதான் ரெண்டாவது தடவையும் சொன்னேன்''
டி.மோகனதாசு, நாகர்கோவில்.
"அந்த டாக்டர் போர்டுலே கடகராசின்னு ஏன் போட்டுருக்கார்?''
"ராசி இல்லாத டாக்டர்ன்னு யாரும் சொல்லிடக் கூடாதாம்''
விஜயா சுவாமிநாதன், திருச்சி.
"எனக்கு இப்ப 73 வயசு ஆகுது. இதுவரைக்கும் நான் எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை''
"நீங்க ஆரோக்கியமா இருக்கிறதைப் பார்க்கும்போதே தெரியுது சார்''
வி.ரேவதி, தஞ்சை.
"நளன் அன்னப் பறவையை ஏன் தூதுவிட்டான்?''
" போஸ்ட்மேன்கள் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க''
"மன்னா அண்டை நாட்டு அரசன் குதிரையில் வந்து நம் அரசியைக் கடத்திச் சென்றுவிட்டான்''
"ராணி சத்தம் போடவில்லையா?''
" சீக்கிரம்... சீக்கிரம் என்று அலறினார்கள்''
"நேற்று எங்க வீட்டில பாம்பு வந்துச்சு. பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்''
"அடப் பாவிகளா... பாம்பாட்டியை எதுக்குடா அடிச்சீங்க?''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
"தலைவர் யாருக்காகவும் எதற்காகவும் இந்த "மூன்று விஷயத்தை' விட்டுத் தரமாட்டார்ன்னு சொன்னீயே... எதை?''
"காலை, மதியம், இரவு உணவைச் சொன்னேன்''
அ.செல்வகுமார், சென்னை-19.