முகப்பு லைஃப்ஸ்டைல் செய்திகள்
மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பிய வேலூர் தந்தைக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!
By RKV | Published On : 09th September 2019 01:51 PM | Last Updated : 06th November 2019 04:15 PM | அ+அ அ- |

மகள் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பி எதிர்பாராத நேரத்தில் இன்ப அதிர்ச்சியாக மோடியிடம் இருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்றிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த டி ராஜசேகரன் எனும் ஓய்வு பெற்ற பிராந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் மேற்பார்வையாளர்.
ராஜசேகரன் மகள் மருத்துவர் ராஜஸ்ரீக்கும் மருத்துவரான மணமகன் சுத்ரசனுக்கும் வரும் செப்டம்பர் 11 ஆம் நாள் திருமணம் நடைபெறவிருக்கிறது.. அதற்கான அழைப்பத்தான் ராஜசேகர் முன்கூட்டியே பிரதமருக்கு அனுப்பியிருந்தார்.
இதையும் பாருங்க... மோடியை மயக்கிய ‘கிர்னார் சிங்கம்’!
மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அவரிருக்கும் பிஸியான வேலைப்பளுவுக்கு இடையில் அவரால் தங்கள் வீட்டுத் திருமணத்திற்கெல்லாம் வர முடியாது என்பதை அறிந்தே இருந்த போதும் ராஜசேகரன், தனக்கு மோடி மீது மிகுந்த அபிமானம் இருந்த காரணத்தால் மகள் திருமணத்திற்கு ஆசை ஆசையாகப் பிரதமருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். ஆனால், கடந்த சனிக்கிழமை அன்று, திடீரென பிரதமர் அலுவலகத்தில் இருந்து வாழ்த்துக் கடிதம் வந்ததும் மொத்த திருமண வீடும் இன்ப அதிர்ச்சியில் துள்ளியது.
மேன் Vs வைல்ட் புகழ் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு
ஆம், ஒரு நாட்டின் பிரதமர், தன்னை மதித்து, தனது அழைப்பிதழை மதித்து தம் மகளின் திருமணத்திற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது கண்டு சாமான்யரான இந்த தந்தையின் மனம் வெகுவாக நெகிழ்ந்து போனது. மோடி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை அப்படியே லாமினேட் செய்து தன் வீட்டின் வரவேற்பறையில் எல்லோரது பார்வையும் பதியும் இடத்தில் மாட்டி வைக்கப்போவதாக ராஜசேகரன் தெரிவித்தார்.