
தலைவலி, மூக்கடைப்பு, சளி, இருமல் ஆகியவற்றுக்கு நீராவி பிடிக்கும் முறை ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. கரோனா பரவும் இந்த கால கட்டத்தில் பல மருத்துவ முறைகள் இருந்தாலும் இயற்கையான 'ஆவி பிடித்தல்' என்பது அவசியமாகிறது.
நல்ல சூடான நீரில் ஆவி பிடிக்கும்போது ஆவி, நாசிகள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. இது நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகளை அழித்து, மூக்கடைப்பு, சளி உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை நீக்குகிறது.
கரோனா வைரஸ் தொற்று நுரையீரலைப் பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதால் இந்த காலகட்டத்தில் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இது மிகச்சிறந்த இயற்கையான எளிய வழிமுறை.
சூடான நீரில் மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி,வேப்பிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இட்டு ஆவி பிடிக்கலாம், ஆவி பிடிக்கும்போது எந்த பொருளுடனும் மஞ்சள் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
உங்களால் தாங்கக்கூடிய அளவிலான சூடான நீரில் ஆவி பிடிக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும். அதேபோன்று ஆவி பிடித்தவுடன் சுத்தமான காட்டன் துணியால் முகத்தைத் துடைத்து அந்த துணியை வெந்நீரில் துவைத்து விடவும். ஏனெனில் முகத்தில் உள்ள அழுக்குகள் அதில் படிந்திருக்கும். கரோனா காலத்தில் வெளியில் சென்று வருவோர், நாள் ஒன்றுக்கு இருமுறை ஆவி பிடிப்பது வைரஸ் தொற்றில் இருந்து காக்கும்.
இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் இருமல், சளி இல்லாவிட்டாலும் வழக்கமான காலத்தில் வாரத்துக்கு இருமுறையாவது ஆவி பிடிப்பது நல்லது. இதனால் முகமும் பொலிவுடன் இருக்கும். முகச் சுருக்கம், முதுமையைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.