பீர் திருடுவதை தொழிலாகக் கொண்ட அமெரிக்கத் தம்பதி!
அமெரிக்கவைச் சேர்ந்த பீர் திருடும் தம்பதியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பீர் திருட்டில் ஈடுபட்ட அமெரிக்கத் தம்பதியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லூசியானாவைச் சேர்ந்த தம்பதி ஆஷ்லே ஃபோர்ப்ஸ்(32), அவரது கணவர் மத்தேயு ஃபோர்ப்ஸ் (35) இருவரும் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றிருந்தனர்.
அப்போது 1,000 டாலருக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் ரூ.73,000) மதிப்புள்ள பீர் ஒன்றை திருடி மறைத்துவைத்து எடுத்துச் சென்றனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இதன் அடிப்படையில் கடைக்காரர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தம்பதி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தம்பதி மேலும் பல கடைகளில் இதுபோன்று பீர் திருடியுள்ளதாகவும், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், பீர் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...