கரோனாவால் குறைந்த ஒலி மாசு

கரோனாவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் ஒலி மாசு முன்பை விட பாதியாகக் குறைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கரோனாவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் ஒலி மாசு முன்பை விட பாதியாகக் குறைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

புளோரிடா, நியூயார்க், கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில் உள்ள தன்னார்வ ஆப்பிள் வாட்ச் பயனர்களிடமிருந்து யு-எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் ஆப்பிள் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒலி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் தொற்றுநோய்க்கு முன்னும், பின்னும் இருக்கும் ஒலி மாசு குறித்து அளவிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கடிதங்கள் என்ற இதழில் வெளியிடப்பட்டன.

அதன்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடும்போது, ​​மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், பொது இடங்களுக்குச் செல்வதை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி சராசரி ஒலி அளவு சுமார் 3 டெசிபல்கள் குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனால், மக்கள் பேசுவதை குறைத்துள்ளது காலப்போக்கில் மக்களின் ஒட்டுமொத்த சுகாதார விளைவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று யு-எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் இணை பேராசிரியர் ரிக் நீட்செல் கூறினார்.

ஏனெனில், நமது எண்ணங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் தற்போது டிஜிட்டல் சாதனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றார். 

ஆய்வில் கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க் ஆகிய இரண்டு நகரங்களிலும் ஒலி அளவு வெகுவாக குறைந்திருந்தது. அதேநேரத்தில் புளோரிடா மற்றும் டெக்சாஸில் ஒலி குறைப்பு சற்றே குறைந்திருந்தது. 

கரோனாவால் பெரும்பாலான மக்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வார நாள்களுக்கும், வார இறுதி நாள்களுக்கும் பெரிதாக வேறுபாடுகள் காணப்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com