மகளிர் உடல்நலன் செயலிகளை பயன்படுத்துவோரில் 18% பேர் ஆண்கள்

வட இந்திய மக்களில் ஆண்களும், பெண்களும் உடல் நலன் தொடர்பாக அதிக அக்கறை கொண்டவர்களாகவும், பெண்களின் உடல் நலன் பற்றி அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் இருப்பதாக ஹெல்த்டெக் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மகளிர் உடல்நலன் செயலிகளை பயன்படுத்துவோரில் 18% பேர் ஆண்கள்

லக்னௌ: வட இந்திய மக்களில் ஆண்களும், பெண்களும் உடல் நலன் தொடர்பாக அதிக அக்கறை கொண்டவர்களாகவும், பெண்களின் உடல் நலன் பற்றி அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் இருப்பதாக ஹெல்த்டெக் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மகளிர் உடல் நலன் தொடர்பான ஆப்களைப் பயன்படுத்தும் இந்தியர்களில் 18.3 சதவீதம் பேர்  ஆண்கள் என்றும், 81.7% பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலன் தொடர்பான செல்போன் ஆப்- ஆன நைராவை பயன்படுத்துபவர்களில் 43% பேர் வட இந்தியர்கள் என்றும், 30 சதவீதம் பேர் தென்னிந்தியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

மாதவிலக்கு, கருவுறுதல், கருமுட்டை வெளியேற்றம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கவனிக்க இந்த ஆப்கள் உதவுகின்றன.

இதுபோன்ற ஆப்களை தற்போது 4.2 லட்சம் பயனாளர்கள் பயன்படுத்துவதாகவும், நைரா ஆப்பை 77 ஆயிரம் ஆண்கள் பயன்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com