அழகான ஹை ஹீல்ஸ்-க்கு பின்னால் இவ்வளவு ஆபத்தா? - ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பெண்கள் தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணியும் பட்சத்தில் எலும்பியல் பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 
அழகான ஹை ஹீல்ஸ்-க்கு பின்னால் இவ்வளவு ஆபத்தா? - ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பெண்கள் தொடர்ந்து 'ஹை ஹீல்ஸ்' அணியும் பட்சத்தில் எலும்பியல் பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹை ஹீல்ஸை தவறாமல் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் நிரந்தர முதுகுவலி ஏற்படக்கூடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேக்ஸ் ஹெல்த்கேர் (எம்.எச்.சி) நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் எலும்பு ஆரோக்கியம் மற்றும் எலும்பியல் பிரச்னைகள் குறித்து தில்லி என்.சி.ஆரில்  20-45 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில், 48.5% பெண்கள் வழக்கமாகவோ அல்லது வார இறுதி நாட்களில் வெளியில் செல்லும்போதோ ஹை ஹீல்ஸ் அணிவதாகத் தெரிவித்துள்ளனர். வழக்கமான அணியும்போது ஹை ஹீல்ஸ், முதுகு, கால் விரல்கள், கணுக்கால் மற்றும் முழங்காலின் மூட்டுகளை பாதிக்கிறது என்று மேக்ஸ் மருத்துவமனையின் தலைவர் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் மரியா தெரிவிக்கிறார். 

20-30 வயதுடைய பெண்களில் 37.5%பேர் தினமும் ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள். 20-30 வயதுடைய 85.4% பெண்கள் தினசரி அல்லது வார இறுதி நாட்களிலும், வேலை செய்யும் பெணகளில் 43.7% பேர் தினமும், ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள்.

20-30 வயதுடைய பெண்கள் 14.6% பெண்கள் மட்டுமே ஹை ஹீல்ஸை விரும்புவதில்லை அதேபோன்று 30-45 வயதுடைய 52.9% மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 83% பேர் ஹை ஹீல்ஸ் அணிவதை விரும்புவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து மருத்துவர் மரியா கூறும்போது, 'இது முதுகெலும்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பெண்களின் ஒட்டுமொத்த எலும்பு அமைப்பு மற்றும் வடிவமைப்பை பாதிக்கும். குதிகால், கணுக்கால் ஒரு ஒழுங்கற்ற மற்றும் மோசமான அமைப்பை உருவாக்குகிறது. தொடர்ந்து அழுத்தத்தை உருவாக்கி, பாதத்திற்கான சுழற்சியைத் தடுக்கிறது. 

பல சந்தர்ப்பங்களில், பெருவிரல் சிதைந்து‘ ஹாலக்ஸ் வல்கஸ்' எனும் நிலை ஏற்படுகிறது. பின்னாளில் இதனை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனவே, பெண்கள் எப்போதாவது மட்டுமே ஹை ஹீல்ஸ் அணிய வேண்டும் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்காக பிளாட், பாலேரினாக்கள், லோஃபர்ஸ், ஸ்லிப் ஆன்ஸ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்' என்று கூறுகிறார் மரியா. மேலும், பெண்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com