நீங்கள் காபி அதிகம் குடிக்க காரணம் இதுதான்!

நாம் எவ்வளவு காபி குடிக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் மரபணு குறித்த ஆதாரங்களை தென் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
காபி
காபி
Published on
Updated on
1 min read

நாம் எவ்வளவு காபி குடிக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் மரபணு குறித்த ஆதாரங்களை தென் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

காபி குடிக்கும் அளவை நிர்ணயிக்கும் காரணிகளாக மரபணுக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காபி அதிகம் குடிக்கும் சிலருக்கு எந்த பிரச்னையும் வராமல் இருக்கலாம், ஏனெனில் அவர்களின் மரபணு காபினை ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கும். அதுவே, காபி குறைவாக குடிப்பவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். காபின் பொருளை அவருடைய மரபணு ஏற்றுக்கொள்ளாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

அதாவது காபி குடிப்பதால் ஏற்படும் தனிப்பட்ட சாதக பாதகங்களை அவர்களின் மரபணுக்களும் தீர்மானிக்கின்றன என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

தென் ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய 390,435 பேர் பங்கேற்ற ஆய்வில், உயர் இரத்த அழுத்தம், ஆஞ்சினா எனும் இதயத்தில் ரத்த ஓட்டம் குறைவாக இருத்தல், இதயத்துடிப்பில் பிரச்னை (இதயத்துடிப்பு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்) இருப்பவர்கள் 
காபி குறைவாக குடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'மக்கள் எல்லா வகையான காரணங்களுக்காகவும் காபி குடிக்கிறார்கள். அவர்கள் சோர்வாக இருக்கும்போது, சந்தோசத்தில் இருக்கும்போது என அனைத்து தருணங்களிலும் காபியை எடுத்துகொள்கின்றனர். ஏனென்றால் அது நல்ல சுவை. அவர்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற காபி குறித்த ஆய்வுகள் காபிக்கு அடிமையாகும் பழக்கத்தைக் குறைக்கிறது. காபி அதிகம் குடிப்பதால் வரும் அபாயத்திலிருந்து காக்க உதவுகிறது' என்று ஆய்வாளர், பேராசிரியர் எலினா ஹிப்போனென் தெரிவித்தார். 

நாம் எவ்வளவு காபி குடிக்கிறோம் என்பதைப் பொருத்து நம்முடைய இதய செயல்பாடுகள் இருக்கும். எனினும், இது அவரவர் உடலின் மரபணு சார்ந்தும் இருக்கிறது என்று ஆய்வாளர் பேராசிரியர் ஹிப்போனென் கூறுகிறார்.

அதாவது, 'கூடுதலாக ஒரு கப் காபியைக் குடிக்க வேண்டாம் என்று உங்கள் உடல் உங்களுக்குச் சொன்னால் அதற்கு ஒரு காரணம் இருக்கும். எனவே, உங்களுடைய உடல் சொல்வதை கேளுங்கள். நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்பதைவிட உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com