30 கோடி தரவிறக்கங்களைக் கடந்த ‘ட்ரூ காலர்’ செயலி

அழைப்புச் செயலிகளில் முதன்மையான ‘ட்ரூ காலர்’ செயலி 30 கோடி தரவிறக்கங்களைக் கடந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
30 கோடி தரவிறக்கங்களைக் கடந்த ‘ட்ரூ காலர்’ செயலி
30 கோடி தரவிறக்கங்களைக் கடந்த ‘ட்ரூ காலர்’ செயலி
Published on
Updated on
1 min read

அழைப்புச் செயலிகளில் முதன்மையான ‘ட்ரூ காலர்’ செயலி 30 கோடி தரவிறக்கங்களைக் கடந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சுவீடனைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ட்ரூ காலர்’ செயலியை உலகம் முழுவதும் இதுவரை 30 கோடிக்கும் அதிகமான பயனர்கள் தரவிறக்கம் செய்திருப்பதாகவும் இந்தியாவில் மட்டும் 22 கோடி பயனர்கள் இருப்பதாகவும்  அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மோசடி அழைப்புகள் , அதிக தொடர்புகளுக்கு அனுப்பப்பட்ட செய்தி , அழைப்பவரின் விவரம் ஆகியவற்றைத் தெரியப்படுத்தும் ட்ரூகாலர் முன்னதாக பயனர் வசதிகள் , வாய்ஸ் காலிங் . ஸ்மார்ட் எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.

தற்போது அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆலன் மாமேதி , ‘பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் அதன் மூலம் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான பயனர்களை வரவேற்கவும்  தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலம் எங்கள் நிறுவனத்தை தொடர்ந்து வளர்ப்பதற்கான தெளிவான திட்டம் எங்களிடம் உள்ளது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

முக்கியமாக குரூப் வாய்ஸ் காலிங்கில் அதிக குரல் தெளிவைத் தக்கவைத்துக்கொண்டு, ஒரு அழைப்பில் எட்டு பங்கேற்பாளர்களை சேர்க்க பயனர்களை அனுமதிப்பது குழுவில் உள்ள மோசடி பயனர்கள் பயனருக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டால் அவர்களை அடையாளம் காணவும் ட்ரூகாலர் உதவும் வடிவமைப்புகள் அனைத்தும் பயனர்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவை என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com