வெயில் காலத்தில் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

வெயில் காலத்தில் உடலியல் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 
வெயில் காலத்தில் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

வெயில் காலத்தில் உடல் உபாதைகள் ஏற்படாமல் தவிர்க்க குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

►சிக்கன், இறால், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடல் சூட்டை அதிகரித்து வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். அசைவப் பிரியர்கள் மட்டன், மீன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். 

► வெயில் அதிகரிக்கும் இந்த நேரத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது.

► வெயில் காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் ஆகியவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். 

► காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதைத் தவிருங்கள். பதிலாக கிரீன் டீ அருந்தலாம்.

► இனிப்பு வகைகளையும் குறைவாக சாப்பிட வேண்டும். குறிப்பாக சர்க்கரையைத் தவிர்க்கலாம். 

► குளிர்ச்சியான குளிர்பானங்கள், குளிர்ச்சியான சோடாக்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக வெயிலில் சென்றுவிட்டு உடனடியாக குளிர்பானங்களை அருந்தினால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். 

► கோடையில் குளிர்ந்த தண்ணீரை அருந்துவதற்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதே நல்லது. 

► அரிசி உணவுகள், கோதுமை, மைதா, ராகி, பயிறு வகைகளை குறைத்துக்கொள்ளலாம். பதிலாக உடல் சூட்டைக் குறைக்கும் காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

► துரித உணவுகளை சாப்பிடுவதை கோடைகாலத்தில் தவிர்த்து விடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com