கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆரோக்கியம் குறித்த விஷயத்தில் இணக்கமுடன் இருக்கும் தம்பதிகள்: ஆய்வில் தகவல்!

பெரும்பாலான தம்பதிகள் ஆரோக்கியம் குறித்த விஷயத்தில் ஒன்றிணைந்து இணக்கமுடன் இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பெரும்பாலான தம்பதிகள் ஆரோக்கியம் குறித்த விஷயத்தில் ஒன்றிணைந்து இணக்கமுடன் இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கணவன்-மனைவிக்கு இடையே இல்லற வாழ்க்கை, இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் நவடிக்கைகள், எந்த நேரத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கின்றனர் என்பது குறித்து ஜப்பான் ஆய்வாளர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். 

'அதிரோஸ்கிளிரோசிஸ்'(Atherosclerosis) என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் மட்டுமல்லாமல், உடல் அமைப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சில நோய்களின் தூக்கத்தின்போது வாழ்க்கைத் துணைவர்கள் கொண்டிருக்கும் சில பொதுவான தன்மைகள் குறித்த ஆய்வில் சில சுவாரசியமான முடிவுகள் தெரியவந்துள்ளன. 

இதற்காக ஜப்பானில் இருந்து 5,391 தம்பதிகள், நெதர்லாந்தில் இருந்து 28,265 தம்பதிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். 

இரு நாடுகளைச் சேர்ந்த தம்பதியரும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், குடித்தல், எடை, உடல் நிறை குறியீட்டெண் கொண்டிருந்தனர். 

அனைவரின் ரத்த அழுத்தம், கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் அளவுகள், நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்தனர்.  

இதில் இருவரின் உடல்நிலையும் பெரும்பாலாக ஒத்து இருப்பதோடு ஆரோக்கியத்தில் இருவரும் ஒருவரையொருவர் அக்கறையோடு ஊக்குவிக்கிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல்நலக்குறைவின்போது அவற்றில் இருந்து மீள ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com