உடல் எடையைக் குறைக்க இதை செய்யுங்க!

உடல் எடையைக் குறைப்பது என்பது சவாலான பணியாகும். பெரும்பாலும், எடையை குறைப்பதற்கு உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை நாடுகிறோம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உடல் எடையைக் குறைப்பது என்பது சவாலான பணியாகும். பெரும்பாலும், எடையை குறைப்பதற்கு உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை நாடுகிறோம்.  உடல் எடையை குறைக்க மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது.

உடல் எடையைக் குறைக்க  எளிமையான வழிமுறைகளை மேற்கொள்ளாலாம்.


1. நடைமுறைக்கு உகந்த  இலக்குகள்

குறைந்த கலோரி கொண்ட உணவை  உட்கொள்ளுவது எடை குறைப்பதற்கு எளிதானது. சில நேரத்தில் குறைந்த கலோரி கொண்ட உணவை உட்கொண்டால்,  ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை அதிகரிப்பு, ஆற்றல் இழப்புக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க நடைமுறைக்கு உகந்த  இலக்குகளை அமைப்பது முக்கியம்.

2.  வழக்கத்தை கடைபிடியுங்கள்

உணவுமுறையை தேர்ந்தெடுக்கும்போது, நீண்ட காலத்திற்கு ஆர்வத்தை இழக்காமல் பின்பற்றக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டு உணவு அட்டவணையை உருவாக்க வேண்டும்.

3. உணவைத் தவிர்க்காதீர்கள்

வேலைப்பளு மற்றும் நேரமின்மை போன்ற எந்த காரணத்தைக் கொண்டும் உணவைத் தவிர்க்காதீர்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு நிறைவான காலை உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் சரியான நேர இடைவெளியில் உணவை உண்ணும்போது, அது தேவையற்ற சிற்றுண்டியின் தூண்டுதல் இருக்காது.

4. விவரக்குறிப்பை படிக்கவும்

கடைகளில் உணவுப் பொருளை வாங்கினால்,  அந்த பொருளின் உறையில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் கலோரி பற்றிய தகவல்கள் உள்ளது. இந்த தகவல் உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு உதவும்.

5. சிறிய தட்டு பயன்படுத்துவது

ஒரு சிறிய தட்டைப் பயன்படுத்துவது  உணவு உட்கொள்ளும் அளவைக் கண்காணிக்க உதவும். மேலும், பசியை உணராமல் குறைந்த அளவிலான உணவை உட்கொள்ள உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com