தலைக்கு குளிக்கும்போது இந்த 5 விஷயங்களைச் செய்யாதீர்கள்!

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தலைமுடி பராமரிப்பு என்பது அழகுப் பராமரிப்பு விஷயங்களில் முக்கியமான ஒன்று. 
தலைக்கு குளிக்கும்போது இந்த 5 விஷயங்களைச் செய்யாதீர்கள்!

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தலைமுடி பராமரிப்பு என்பது அழகுப் பராமரிப்பு விஷயங்களில் முக்கியமான ஒன்று. 

சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் இன்று தலைமுடி உதிர்தல், முடி மெலிந்து காணப்படுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

ஏன், இன்று இளம் பெண்கள் பலருக்கும் 'வெள்ளை முடி' பிரச்னை இருக்கின்றது. மாறிவரும் உணவு பழக்கவழக்கமும் வாழ்க்கைமுறையுமே இதற்கு அடிப்படைக் காரணம். எனவே, முடிந்த வரையில் சத்தான உணவுகளை உட்கொள்வதுடன் வெளிப்புற தலைமுடி பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். 

முடி உதிர்தலைத் தடுக்கும் வழிமுறைகளை கையாள்வதுடன் முடி உதிர்தலுக்கான காரணங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை தவிர்ப்பது முக்கியமானது. 

தலைக்கு குளிக்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

தலைமுடி பராமரிப்பில் தலைக்கு குளிக்கும்போது ஏனோதானோ என்று செய்யாமல் முறையாக சரியாகச் செய்ய வேண்டும். தலைக்கு குளிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...

ஷாம்பூ பயன்பாடு

ஷாம்பூ போட்டு குளிக்கும்போது ஷாம்பூவின் அளவு அதிகமாகவும் இருக்கக்கூடாது, குறைவாகவும் இருக்கக்கூடாது. உங்கள் தலைமுடியின் அளவுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.

ஷாம்பூவை தண்ணீரில் கலந்து பின்னர் அப்ளை செய்ய வேண்டும். ஸ்கால்பில் ஷாம்பூ இல்லாத அளவுக்கு நன்றாக தண்ணீர் விட்டு முடியை அலச வேண்டும்.

அடுத்தாக, மருத்துவரின் அறிவுரை கேட்டு உங்கள் ஸ்கால்பிற்கு ஏற்ற ஷாம்பூவை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டியது அவசியம். 

ஹேர் மாஸ்க்/கண்டிஷனர் 

தலைக்கு குளிக்கும்போது குறைந்தபட்சம் தலையில் எண்ணெயாவது வைத்து குளிக்க வேண்டும். முட்டை வெள்ளைக்கரு, மருதாணி உள்ளிட்ட ஏதேனும் ஒரு இயற்கையான ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம். 

இரண்டாவதாக, ஷாம்பூ பயன்படுத்திய பின்னர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை ஸ்கால்பில் படாதவாறு உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் முடி மிகவும் வறட்சியாகி உடைந்துவிடும். 

ஈரத்தில் தலைவாருதல் 

சிலர் குளித்தவுடன் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு வாருவார்கள். இது முற்றிலும் தவறு. இது முடியின் உறுதித்தன்மையை குலைக்கும். தலைமுடி நன்றாக காய்ந்தபின்னரே சீப்பு பயன்படுத்த வேண்டும். அதுபோல ஈரத்தில் பின்னல் போடக்கூடாது. தலைமுடியை டவல் கொண்டு லேசாக துடைக்க வேண்டும். அழுத்தித் துடைக்கக்கூடாது. முடிந்தவரை சீப்பு பயன்படுத்தாமல் 'ப்ரீ ஹேரில்' முடியை உலர்த்துவது நலம். 

ஸ்கால்ப் ஸ்க்ரப்

ஸ்கால்பில் உள்ள தேவையற்ற செல்கள், ஆயில், பொடுகு ஆகியவற்றை நீக்கவும் புது செல்களை உருவாக்கவும் 'ஸ்கால்ப் ஸ்க்ரப்' பயன்படுத்துவது அவசியம். 

சீரம்

தலைக்கு குளித்துவிட்டால் பலரும் இரு நாள்களுக்கு எண்ணெய் பயன்படுத்துவதில்லை. சுற்றுச்சூழல் மாசினால் முடி உடைந்து விட வாய்ப்புள்ளது. எனவே, தலைக்கு குளித்து முடி நன்றாக உலர்ந்த பின்னர் சீரம் அல்லது லேசாக எண்ணெய் வைத்தபின்னர் தலையை வாற வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com