உடல் எடையைக் குறைக்க உதவும் பாப்கார்ன்.. ஆச்சரியமூட்டும் தகவல்

பாப்கார்ன் என்றாலே பலருக்கும் திரையரங்கம்தான் நினைவுக்கு வரும். அப்போதுதான் பலரும் அந்த பாப்கார்னை ருசிப்பது வழக்கம்.
உடல் எடையைக் குறைக்க உதவும் பாப்கார்ன்.. ஆச்சரியமூட்டும் தகவல்
உடல் எடையைக் குறைக்க உதவும் பாப்கார்ன்.. ஆச்சரியமூட்டும் தகவல்
Published on
Updated on
1 min read

பாப்கார்ன் என்றாலே பலருக்கும் திரையரங்கம்தான் நினைவுக்கு வரும். அங்குச் செல்லும்போதுதான் பலரும் பாப்கார்னை ருசிப்பது வழக்கம்.

சிலர் மிகவும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் பாப்கார்ன் இருக்கும். பொதுவாக நொறுக்குத் தீனிகளில் நன்மை செய்வது ரொம்பக் குறைவு. ஆனால் எல்லாவற்றுக்கும் மாறாக பாப்கார்ன் உடலுக்கு பல அற்புத நன்மைகளை செய்கிறது.

இப்போதெல்லாம் வீட்டிலேயே பாப்கார்ன் செய்து சாப்பிடும் வசதி வந்துவிட்டது. பிறகென்ன.. பாப்கார்ன் பற்றி படித்து முடித்ததும் அடிக்கடி வீட்டிலேயே செய்தும் சாப்பிடலாம்தானே. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கடைகளில் கிடைக்கும் பல ரசாயனங்கள் தடவிய பாப்கார்ன்களுக்கு இது பொருந்தாது.

சரி.. அப்படி என்னதான் நன்மை இருக்கிறது பாப்கார்னில் என்று கேட்பவர்களுக்கு..

பாப்கார்னில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் , மாங்கனீசு, நார்ச்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது. இதனால், பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. 

சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன், முழுக்க முழுக்க முழு தானியங்களால் ஆனது. எனவே, அதிக நார்ச்சத்து இருக்கும். இது செரிமானத்துக்கு பேருதவி புரியும்.

அது மட்டுமல்ல, வயிற்று உபாதை, குடல் சார்ந்த பிரச்னைகளை தீர்க்கும் திறனும் உள்ளது.

பாப்கார்னை தொடர்ந்து சாப்பிட்டால், இரத்த நாள சுவர்களில் இருக்கும் கொழுப்பை கரைக்கும் என்றும் கூறப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளும் பாப்கார்ன் சாப்பிடலாம். 

ஒரு முழு தானியமான பாப்கார்ன் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் ரத்த குழாய்களிலும், தமனியிலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. எனவே, உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது.

பாப்கார்ன் நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றியாகும்.

புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்கும் அடிப்படைக் கூறுகளை எதிர்த்து போராடுவதே இந்த ஆன்டி ஆக்ஸிடென்டின் முக்கியப் பணியாகும்.

அதிக அளவில் நார்ச்சத்து உடலில் இருக்கும்போது, இது ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. எனவே, அனைவருக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவு அவசியமான ஒன்றாகும்.

ஒரு கிண்ணம் பாப்கார்ன் 30 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு சிறிய பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸைக் காட்டிலும் 5 மடங்கு குறைவு.

இதில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றை எளிதில் நிரப்பி, பசியை தூண்டும் ஹார்மோனை சுரக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com