செலவே இல்லாமல் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முக அழகுக்காக ஃபேஷியல் செய்கின்றனர். இதற்காக பார்லரில் ஆயிரக்கணக்கில் வசூல் செய்கின்றனர். 
செலவே இல்லாமல் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி?

இன்றைய இளம் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முக அழகுக்காக ஃபேஷியல் செய்கின்றனர். இதற்காக பார்லரில் ஆயிரக்கணக்கில் வசூல் செய்கின்றனர். 

பார்லரில் பெரும்பாலாக முகத்தை க்ளீன்ஸிங் செய்ய ரசாயனம் அடங்கிய பொருள்கள்தான் பயன்படுத்துகின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதும் இல்லை. 

இதற்கு மாற்றாக நீங்கள் செலவே இல்லாமல் வீட்டிலேயே பேஷியல் செய்யலாம். 

செய்ய வேண்டிய முறை: 

1. முதலில் முகத்தை ஐஸ்கட்டி கொண்டு நன்றாகக் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கீழிருந்து மேல் நோக்கி 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். இது முகத்தில் உள்ள துளைகளைக் குறைக்கும். 

2. பின்னர் கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து அத்துடன் சிறிது பால் சேர்த்து அந்தக் கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து சில நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். கடலை மாவு முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும், பால் கரும்புள்ளிகளை அகற்றும். 

3. பார்லரில் டீ- டேன் என்று சொல்வார்கள். அதை வீட்டிலேயே செய்யலாம். நன்கு சூடான நீரில் ஆவி பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்! 5 நிமிடங்கள் ஆவி பிடித்தால் போதுமானது. முடிந்தால் துளசி, புதினா இலை என ஏதேனும் ஒரு நறுமணப் பொருளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். 

4. அடுத்து ஸ்க்ரப் கலவையை தயார் செய்ய வேண்டும். காபி பவுடர் 3 டீஸ்பூன், கெட்டித் தயிர் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இது முகத்தில் இறந்த செல்களை அழிக்கும். 

5. அடுத்து பேஷியலுக்கு ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அத்துடன் சந்தன பவுடர், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவலாம். இது முகத்தில் உள்ள தேவையற்ற மருக்களை நீக்கி முகத்தைப் பொலிவாக்கும். 

6. இறுதியாக ஏதேனும் ஒரு மாய்சரைசரை பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின் இ ஆயில் சேர்த்து பயன்படுத்தலாம். இல்லையெனில் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு மாய்சரைசரை பயன்படுத்தலாம். 

அப்புறம் என்ன! இனி பார்லருக்கு போகத் தேவையில்லை..! வீட்டிலேயே பேஷியல் செய்யுங்கள்..! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com