பாடி லோஷன் - எப்படி பயன்படுத்த வேண்டும்?
By DIN | Published On : 30th April 2022 02:55 PM | Last Updated : 30th April 2022 02:55 PM | அ+அ அ- |

சாதாரணமாகவே சிலருக்கு எந்நேரமும் சரும வறட்சி இருக்கும். அதிலும் கோடை காலத்தில் உடலில் நீரேற்றம் குறைந்து உடல் முழுவதுமே பெரும்பாலானோருக்கு வறட்சியாகக் காணப்படும்.
இந்த சூழ்நிலையில் உடல் வறட்சியைத் தடுக்கவும் சருமப் பாதுகாப்புக்கும் பாடி லோஷன்(உடலில் தடவும் திரவம்/கிரீம்) பயன்படுத்துவது அவசியம். பெண்கள் அதிகமாக இதனை பயன்படுத்தினாலும் சிலர் சரியான முறையில் அதனை உபயோகிப்பதில்லை.
பாடி லோஷன் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
♦அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷன் பயன்படுத்தலாம்.
♦மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்த வேண்டும்.
♦எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடி லோஷன்களை பயன்படுத்தலாம்.
♦ அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்துங்கள்.
♦குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடி லோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும்.
♦ முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும்.
♦கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடி லோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்.
இதையும் படிக்க | சன்ஸ்கிரீன் பாதுகாப்பானது அல்ல!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...