கழுத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?
By DIN | Published On : 04th August 2022 05:59 PM | Last Updated : 04th August 2022 05:59 PM | அ+அ அ- |

சிலருக்கு முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். ஆனால், கழுத்துப் பகுதியைச் சுற்றி கருமையாகக் காணப்படும். இது முகத்தின் அழகையே கெடுக்கும் விதத்தில் இருக்கும்.
என்னதான் தேய்த்துக் குளித்தாலும் இந்த கருமை போகவில்லை என்று வருத்தப்படுவோர் அதிகம்.
ஆனால், கழுத்தில் உள்ள கருமையைப் போக்க இயற்கையாகவே சில வழிகள் உள்ளன.
அந்தவகையில், கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்குவதற்கு சிறந்த தீர்வு எலுமிச்சை சாறு. குளிப்பதற்கு முன்பாக சிறிதளவு எலுமிச்சைச் சாறு துளிகளை கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் இருமுறை செய்யலாம்.
இதையும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
அதுபோல பாசிப்பயறு மாவு கருமையைப் போக்கி சருமம் பளபளப்பு அடைய வைக்கும் சிறந்த பொருள். பாசிப்பயறு மாவை குளிக்கும்போது தொடர்ந்து பயன்படுத்தி வர கருமை நீங்கும்.
அதுபோல, ஓட்ஸ் உடன் சிறிது தயிர் சேர்த்து பேக் போன்று கழுத்துப் பகுதியில் போட்டு வரவும். இதுவும் சிறந்த தீர்வாக இருக்கும்.
உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு பேஸ்டையும் பயன்படுத்தலாம்.
தக்காளியை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு சிறிது சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம்.
இயற்கையான பொருள்கள் என்பதால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாததால் இதனை முயற்சிக்கலாமே!
இதையும் படிக்க | முகப்பருவால் பிரச்னையா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க, போதும்!