எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவரா நீங்கள்?
By DIN | Published On : 15th August 2022 04:50 PM | Last Updated : 15th August 2022 05:02 PM | அ+அ அ- |

சருமப் பிரச்னைகளில் ஒன்றான எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்களுக்கு என்னதான் மேக் அப் போட்டாலும் சில மணி நேரங்களில் மேக் அப் கலைந்து முகத்தில் எண்ணெய் வழியும்.
அப்படியான எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது தக்காளி.
தக்காளியில் ஆன்டி- ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. மேலும் சருமத்தின் எண்ணெய்த் தன்மையை போக்கும் வல்லமை கொண்டது.
இதையும் படிக்க | ஒரு லிப்ஸ்டிக்...5 வழிகளில் பயன்படுத்தலாம்! எப்படி?
எனவே, தக்காளி கொண்டு முகத்தில் அவ்வப்போது மசாஜ் செய்து வர சருமம் மேம்படும்.
தக்காளிச் சாறையோ அல்லது ஒரு பாதி தக்காளியைக் கொண்டோ சருமத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காயவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதனால் சருமம் பொலிவும் பெறும், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் கூட படிப்படியாக மறையும்.
சரும அழகுக்கு தக்காளி மிகச்சிறந்த பொருள். மேலும் உணவிலும் தக்காளி சேர்த்துவர சருமம் பளபளக்கும்.
அதுபோல எண்ணெய் தன்மை சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். இது சருமத்தை புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்.
இதையும் படிக்க | தலைமுடி வறட்சியா? முடி கொட்டுகிறதா? சரிசெய்ய எளிய வழிகள்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...