காலை எழுந்தவுடன் இதையெல்லாம் சாப்பிடாதீங்க! என்னென்ன சாப்பிடலாம்?

சிலர் காலையில் எழுந்தவுடன் டீ, காபியுடன் நொறுக்குத் தீனிகள், பிஸ்கட், ரஸ்க்... அடுத்து காலை உணவுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவார்கள்.
காலை எழுந்தவுடன் இதையெல்லாம் சாப்பிடாதீங்க! என்னென்ன சாப்பிடலாம்?

இரவு முழுவதும் ஓய்வெடுக்கும் உடலுக்கு காலையில் எழுந்தவுடன் ஊட்டச்சத்து அவசியம். சிலர் காலையில் எழுந்தவுடன் டீ, காபியுடன் நொறுக்குத் தீனிகள், பிஸ்கட், ரஸ்க்... அடுத்து காலை உணவுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவார்கள். இது சரியானதா என்றால் இல்லை என்பதுதான் பதில். 

காலையில் மேற்குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. அவ்வாறு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும், உங்கள் மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும், மந்தமான நிலை ஏற்படும். கார்போஹைட்ரேட் உடல் எடையை அதிகரிக்கும். 

எனவே, காலையில் எழுந்தவுடன் உடலுக்கு என்ன தேவை? என்ன சாப்பிட வேண்டும்? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். 

காலையில் புரோட்டீன் உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன் உற்சாகமாக செயல்பட வைக்கிறது. 

காலையில், முதல் உணவு ஊட்டச்சத்து மிக்க உணவாக இருக்க வேண்டும். மேலும் இது உடல் எடையைக் குறைக்கும். 

காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? 

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது 400 மிலி தண்ணீர் குடிக்க வேண்டும். 

அடுத்து நட்ஸ் சாப்பிட வேண்டும். பாதாம் - 5, வால்நட் - 2 சாப்பிடலாம். 

முருங்கை கீரை சூப், வெஜிடபிள் சூப் ஏதேனும் சாப்பிடலாம். 

காலை உணவுக்கு முன்னதாக ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம். 

காலை உணவாக என்ன சாப்பிடலாம்?

புரோட்டீன் நிறைந்த எந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். 

வேகவைத்த கொண்டைக் கடலை /பச்சைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளில் ஏதேனும் ஒன்றுடன் இரண்டு முட்டை எடுத்துக்கொள்ளலாம். 

ஓட்ஸுடன் நட்ஸ், பேரிச்சை சேர்த்து சாப்பிடலாம்,

3 இட்லியுடன் தேங்காய் சட்னி அல்லது வெஜிடபிள் குருமா. பீன்ஸ், பட்டர்பீன்ஸ் ஆகிய காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். 

கோதுமை பிரெட் மற்றும் பீனட் பட்டர்(Peanut Butter)

சப்பாத்தி, பன்னீர் குருமா. 

காலையில் முடிந்தவரை கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்து புரோட்டீன், நார்ச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக்கொள்வது அன்றைய நாளை உங்களுக்கு சுறுசுறுப்பாக வைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com