லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள்? பாதுகாப்பாக வைத்திருக்க 7 வழிகள்!

அனைத்துத் துறைகளும் இன்று கணினிமயமாகி வரும் நிலையில், லேப்டாப்(மடிக்கணினிகள்) இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் மின்னணு சாதனம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அனைத்துத் துறைகளும் இன்று கணினிமயமாகி வரும் நிலையில், லேப்டாப்(மடிக்கணினிகள்) இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் மின்னணு சாதனம். அலுவலக வேலை மட்டுமின்றி கல்வி உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவும் பலரும் பயன்படுத்துகின்றனர். 

பல ஆயிரம் கொடுத்து வாங்கும் லேப்டாப், பராமரிப்பின்மை காரணமாகவும் பல தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுகின்றன. தேய்மானம், சேதம் காரணமாக சில வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டிய சூழலும் நிலவுகிறது. அடுத்தடுத்த வெர்ஷன்கள் வந்தாலும் அடிப்படையாக லேப்டாப்பை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி? சில யோசனைகள் இதோ.. 

கவனத்துடன் கையாளவும்

மடிக்கணினியைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். லேப்டாப் திரை எளிதில் உடையக்கூடியது. எனவே, அதில் கீறல் விழாத அளவுக்கு கவனமாக பயன்படுத்த வேண்டும். சிலர் வேகமாக திறக்கும்போது மூடும்போது திரையில் உராய்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க வேண்டும். அதுபோல மேசையில் வைத்து இழுப்பது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். 

சுத்தம் செய்யுங்கள்

எந்தவொரு பொருளையும் சுத்தமாக வைத்துக்கொள்வதை வழக்கமாகக்கொள்ள வேண்டும். அந்தவகையில் லேப்டாப்பை சுத்தமான வெள்ளைத் துணி கொண்டு தூசி அண்டா வண்ணம் துடைக்க வேண்டும். லேப்டாப் கீபோர்டை பிரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். கீபோர்டு இடுக்கில் எந்த பொருளும் சேராதவாறு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். 

நொறுக்குத் தீனி

பலருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் வேலை செய்யும்போது கீபோர்டில் நொறுக்குத் தீனிகளை வைத்துச் சாப்பிடுவது. இதனால் நொறுக்குத் தீனிகள் கீபோர்டில் இடுக்கில் சென்று அசுத்தத்தை ஏற்படுத்தும். கீபோர்டு இடைவெளிகளில் உள்ள அழுக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்வது லேப்டாப் அதிக வெப்பமடைவதைத் தடுக்கும். 

மென்பொருள் 

கணினியை வைரஸ் தாக்காதவாறு தேவையான 'ஆன்டிவைரஸ்' மென்பொருள்களை வைத்திருக்க வேண்டும். தேவையற்ற கோப்புகளை நீக்குவதுடன் இணையத்தில் உள்ள catche களையும் அவ்வப்போது நீக்க வேண்டும்.

அப்டேட்டுகளுக்கு ஏற்றவாறு கணினியின் ஓ.எஸ். ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். தேவையான மென்பொருள் செயலிகளையும் புதுப்பித்து வைத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் பாதிப்பு வந்தால் உடனடியாக நீக்க வேண்டும். 

வன்பொருள்

பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கணினியின் சேமிப்புத் திறனை தொடர்ந்து அதிகப்படுத்த வேண்டும். ரேம் அதிகமாக இருந்தால் கணினியின் செயல்திறன் நன்றாக இருக்கும். 

சூரிய ஒளி/ வெப்பம்

மடிக்கணினியை நேரடி சூரிய ஒளியில் அல்லது சூடான பகுதியில் வைப்பது அதன் திறனைக் குறைப்பதுடன் ஆயுளையும் குறைக்கும். சாதாரண வெப்பநிலையில் அல்லது குளிர்ச்சியான இடத்தில் லேப்டாப் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். சமமான மேற்பரப்பில் இருப்பதையும் உறுதிசெய்யுங்கள். 

சார்ஜிங்

சிலர் மணிக்கணக்கில் லேப்டாப்பை சார்ஜ் செய்வார்கள். அது பேட்டரி செயலிழப்புக்கு காரணமாகிவிடும். லேப்டாப்பை 24/7 சார்ஜ் செய்ய விடாதீர்கள். முழுமையாக சார்ஜ் ஏறியவுடன் அணைப்பது நல்லது. சார்ஜர் கேபிள்களில் தேய்மானம் உள்ளதா என அவ்வப்போது சரிபார்த்துக் கொண்டே இருங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com