நினைவுத்திறன் அதிகரிக்க உடற்பயிற்சி செய்யுங்கள்! - ஆய்வு

இன்றைய சூழ்நிலையில் பலரும் ஞாபக மறதியால் அவதிப்படுகின்றனர். என்னதான் ஞாபக சக்தியை மேம்படுத்த பல விஷயங்களில் ஈடுபட்டாலும் நினைவுத்திறன் குறைவாகவே இருக்கிறது. 
நினைவுத்திறன் அதிகரிக்க உடற்பயிற்சி செய்யுங்கள்! - ஆய்வு

இன்றைய சூழ்நிலையில் பலரும் ஞாபக மறதியால் அவதிப்படுகின்றனர். என்னதான் ஞாபக சக்தியை மேம்படுத்த பல விஷயங்களில் ஈடுபட்டாலும் நினைவுத்திறன் குறைவாக இருப்பவர்களுக்கு அறிவியல் பதில் சொல்கிறது.

நினைவுத்திறன் அதிகரிப்பு

லேசான நமது உடல் செயல்பாடுகூட நினைவக செயல்பாட்டை உடனடியாக மேம்படுத்துகிறது. உடற்பயிற்சியின்போது ஒவ்வொரு நொடியும் உடல் அசைவு ஏற்படுகிறது. இதனால் நினைவுத்திறன் அதிகரிக்கிறதாம்.

இதனால் இப்போது நீங்கள் உடற்பயிற்சி செய்வதை  நினைவில்கொள்ள வேண்டும். இது கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் இர்வின் ஆய்வுகுழுவினரின் கண்டுபிடிப்பும்கூட . மிக இலகுவான உடற்பயிற்சிகளும் கூட நினைவக உருவாக்கம் மற்றும் சேமிப்பிற்கு காரணமான மூளையின் பாகங்களுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

1௦ நிமிட தாய்ச்சி/யோகா

ஒரு சிறிய 'தாய்ச்சி' உடற்பயிற்சி அல்லது யோகாவை, தங்களின்  ஒவ்வொரு நாள் செயல்பாட்டிலும் சேர்க்கும் நண்பர்கள் தங்கள் நினைவுத்திறன் சாவியை கையில்  வைத்திருக்கிறார்கள் எனலாம். எனவே, அவர்கள் நினைவில் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர், இர்வின் மற்றும் ஜப்பானின் சுகுபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மிக இலகுவான உடற்பயிற்சிகள் கூட நினைவக உருவாக்கம் மற்றும் சேமிப்பிற்குக் காரணமான மூளையின் பகுதிகளுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

ஆய்வு சொல்வது என்ன?

ஆய்வாளர்கள் 36 ஆரோக்கியமான இளைஞர்களிடம் உடல் செயல்பாடு தொடர்பாக ஆய்வு செய்தனர். 10 நிமிட மிதமான உழைப்பு/உடல் செயல்பாடுகூட கணிசமான அறிவாற்றல் திறனை அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்தனர். உயர் தெளிவுத்திறன் கொண்ட செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங்கைப் (high-resolution functional magnetic resonance imaging ) பயன்படுத்தி, குழு உடற்பயிற்சி அமர்வுகளுக்குப் பிறகு, பாடங்களின் தன்மை மூலம் மூளையை ஆய்வு செய்தது. மேலும்,  அப்போது அங்கே, விரிவான நினைவக செயலாக்கத்துடன் இணைக்கப்பட்ட ஹிப்போகாம்பல் டென்டேட் கைரஸ் மற்றும் கார்டிகல் பகுதிகளுக்கு (hippocampal dentate gyrus and cortical areas) இடையே சிறந்த இணைப்பு இருப்பதையும் கண்டறிந்தனர்.

அவர்களின் முடிவுகள் தேசிய அறிவியல் அகாடமி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.

வயதாகும்போது பாதிக்கப்படும் மூளை

'புதிய நினைவுகள் உருவாக்கத்தில் ஹிப்போகாம்பஸ் முக்கியமானது. நாம் வயதாகும்போது பாதிக்கப்படும் மூளையின் முதல் பகுதிகளில் இதுவும் ஒன்று. அல்சைமர் நோயில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவதும் இப்பகுதியே' என்று யுசிஐ பேராசிரியரும் திட்ட இணைத் தலைவருமான மைக்கேல் யாசா கருத்து தெரிவிக்கிறார். நரம்பியல் மற்றும் நடத்தையின் 'ஹிப்போகேம்பஸின் செயல்பாட்டை மேம்படுத்துவது என்பது அன்றாட அமைப்புகளில் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு அதிக செயல்பாட்டைக் கொண்டுள்ளது' என்றார். 

நரம்பியல் அறிவியலாளர்களின் உயர்ந்த நிலையில் உள்ள மூளையின் ஹிப்போகாம்பசில் இணைப்பின் அளவு, திரும்ப அதனைத் தொடர்புகொள்ள அழைக்கும் மேம்பாட்டின் அளவைக் கணித்ததாகக் கண்டறிந்தனர். 

யுசிஐயின் கற்றல் மற்றும் நினைவகத்திற்கான நரம்பியல் துறையின் இயக்குனர் யாசா மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட யுசிஐ மூளை இயக்குனர் யாஸ்ஸா ஆகியோர் இந்த ஆய்வின் மூலம் புதிய தகவல்களை அறிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். 

உடற்பயிற்சியானது நினைவகப் பகுதிகளில் புதிய மூளை செல்களை உருவாக்குவதை ஊக்குவிக்கும் என்றும் உடற்பயிற்சியின் விளைவாக மூளையின் நினைவகத்தை மையமாகக் கொண்ட பகுதிகளுக்கு இடையே தொடர்பு வலுப்படுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். 

மூளையில்  புதிய செல்கள் பிறப்பு

புதிய செல்கள் பிறக்கும் சாத்தியம் உண்டுதான். ஆனால், அவ்வாறு புதிய செல்கள் உருவாக சில காலம் ஆகலாம் என்று ஆய்வாளர் தெரிவிக்கிறார். மேலும், 'நாங்கள் கவனித்தது என்னவென்றால், இந்த 10 நிமிட உடற்பயிற்சிகள் உடனடியாக முடிவுகளைக் காட்டியது' என்றார். 

குறுகிய நடைப் பயிற்சி

நாள் முழுவதும் குறுகிய நடைப்பயிற்சி இடைவெளிகள் கூட நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துவதில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர் யாசா கூறினார். 

அனைத்து வயதினருக்கும் இது பொது விதிதான்

யுசிஐ மற்றும் சுகுபா பல்கலைக்கழகத்தில் உள்ள யாசா மற்றும் அவரது குழுவினர் வயது தொடர்பான மனநலக் குறைபாட்டின் அதிக ஆபத்தில் உள்ள வயதானவர்களைச் சோதிப்பதன் மூலமும், வழக்கமான, சுருக்கமான, இலகுவான உடற்பயிற்சி செய்யப்படுகிறதா என்பதைப் பார்க்க நீண்ட கால தலையீடுகளை மேற்கொள்வதன் மூலமும் இந்த ஆராய்ச்சியின் வழியை விரிவுபடுத்துகின்றனர். தினசரி பல வாரங்கள் அல்லது மாதங்கள் மூளையின் அமைப்பு மற்றும் நினைவுத்திறன் அமைப்புச் செயல்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அல்சைமர் குறைவு

உடற்பயிற்சி/தாய்ச்சி முறையை வயதானவர்கள் புரிந்துகொள்ளும் பட்சத்தில் நல்ல பலன்கள் உண்டு என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது. இதனால் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை நாங்கள் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, இதில் தெளிவாக உறுதியாகத் தெரியும் விஷயம் என்னவெனில், உடல் செயல்பாட்டின் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்கலாம், மேலும் அல்சைமர் வியாதி வரும் நிலையையும் மாற்ற முடியும் என்பதே.

நினைவுத்திறனை அதிகரிக்க உடற்பயிற்சி/தாய்ச்சி செய்யத் தொடங்குங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com