காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஆய்வில் புதிய தகவல்

காபி குடிப்பதால் இதயப் பிரச்சனைகளை உண்டாக்கும்  என்று மருத்துவர்கள் மற்றும் மக்களிடையே கருத்து நிலவி வருகிறது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

காபி குடிப்பதால் இதயப் பிரச்சனைகளை உண்டாக்கும்  என்று மருத்துவர்கள் மற்றும் மக்களிடையே கருத்து நிலவி வருகிறது.  ஆனால் இதயத்தைப் பாதுகாக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிகளின் முடிவின் படி, தினமும் இரண்டு முதல் மூன்று கப் காபி குடிப்பதால், இதய நோய், இதய செயலிழப்பு அல்லது இதய பிரச்னை அல்லது ஏதேனும் காரணத்திற்காக சீக்கிரம் இறக்கும் ஆபத்து 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைகிறது என்று சிஎன்என் தெரிவித்துள்ளது. .

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் எம். கிஸ்ட்லர், காபி குடிப்பதால்  எந்தத் தீங்கும் இல்லை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று கூறினார்.

முதல் ஆய்வில் இதய நோய் இல்லாத மற்றும் சராசரியாக 57 வயதுடைய 3,82,500 பெரியவர்கள் பங்கேற்ற ஆராய்ச்சியில்,  தினமும் இரண்டு முதல் மூன்று கப் காபி குடித்தவர்களுக்கு இதயப் பிரச்சனைகள் உருவாவதற்கான ஆபத்து மிகக் குறைவாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பவர்களுக்கு பக்கவாதம் அல்லது இருதய நோயால் இறக்கும் ஆபத்து மிகக் குறைவு என்றும் கண்டறிந்தனர்.

ஒவ்வொரு நாளும் எந்த வகையான காபியையும் இரண்டு முதல் மூன்று கப் குடிப்பதால், சீக்கிரம் இறக்கும் அபாயம் மற்றும் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்று கண்டறிந்தனர்.

மற்றொரு ஆய்வில்  இருதய  நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடித்தால்  மரணம் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com