சியா விதைகள் நார்ச்சத்து, தாவர அடிப்படையிலான புரதம், தாதுக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இவை நமது உடலை பல்வேறு வழிகளில் ஆதரிக்கின்றன.
இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
சியா விதைகளில் குர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது இதய நோய் உள்பட பல நோயிலிருந்து காக்கும். இந்த விதைகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஃபைபர் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும், டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகிறது. சியா விதைகள் உயர் இரத்த சர்க்கரை அளவை தடுக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம் மேம்படுத்துகிறது
சியா விதைகளில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்பட எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியமான எலும்பு, தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு இன்றியமையாதது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பயனளிக்கும். உணவில் சியா விதைகளைச் சேர்ப்பதால் உடல் எடை குறைய வாய்ப்பில்லை என்றாலும், உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அது சமச்சீரான, சத்தான உணவுக்கு ஒரு பயனுள்ளதாக இருக்கும்.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது
சியா விதைகளில் அதிகப்படியான அளவிற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. சியா விதைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.
பற்களை உறுதிப்படுத்த உதவுகிறது
சியா விதைகளில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், பற்களின் வலிமையை அதிகரிக்க உதவும். அத்துடன் எலும்புகளின் பலத்தையும் இவை கூட்டும். மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு இந்த சியா விதைகள் நல்ல பலனை தரும்.
உட்கொள்ளும் அளவு
ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி அல்லது மூன்று தேக்கரண்டி (15 கிராம்) சியா விதைகளை உட்கொள்ளலாம்.
சியா விதைகளை ஊறவைத்து தண்ணீருடன் உட்கொள்ளலாம் அல்லது தூள் செய்து தோசை/ இட்லி மாவு அல்லது சப்பாத்தி மாவுடன் கலக்கி உபயோகிக்கலாம்.
இதையும் படிக்க:ஆளி விதைகள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?