தினமும் தயிர் சாப்பிட்டால் என்னவாகும்?

சிலர் எந்த பருவ காலத்திலும் தினமும் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். உண்மையில் அது மிகவும் சரியான விஷயம்.
தினமும் தயிர் சாப்பிட்டால் என்னவாகும்?

சிலர் எந்த பருவ காலத்திலும் தினமும் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். உண்மையில் அது மிகவும் சரியான விஷயம். தினமும் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. 

தினமும் தயிர் உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

மேலும் இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் என்கிறது மற்றொரு ஆய்வு. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எலும்பின் உறுதித் தன்மையை அதிகரிக்கிறது. 

தலைமுடியை வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது.

மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கும் தொடர்ந்து தயிர் கொடுக்கலாம். 

சருமம் பொலிவுறவும் உதவுகிறது. பெண்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 

பசியின்மை, வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும். சாப்பிடும்போது இறுதியாக தயிர் சாப்பிடுவது சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதற்காகத்தான். 

தினமும் சாப்பிடலாமா? 

தயிர் தினமும் சாப்பிடலாம். ஆனால், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிகம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால் தினமும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது என்கின்றனர். 

தினமும் சாப்பிடாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது தயிர் சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். 

உடலில் ஏதேனும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com