உடல் பருமன் பிரச்னையா? இந்த 8 உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்!

உடல் எடையைக் குறைக்க இயற்கையான சில உணவுகள் உதவுகின்றன. உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி உங்களை சுறுசுறுப்பாக வைக்கவும் இந்த உணவுகள் உதவும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உடல் எடையைக் குறைக்க இன்று பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதே உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதுதவிர, மரபுக் காரணங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கங்கள் என பல காரணங்களைக் கூறலாம். 

உடல் எடையைக் குறைக்க இயற்கையான சில உணவுகள் உதவுகின்றன. உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி சுறுசுறுப்பாக வைக்கவும் இந்த உணவுகள் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்னென்ன உணவுகள்? 

அவோகேடா பழம்- இதில் வைட்டமின், தாதுக்கள் அதிகம் உள்ளன. 

பாதாம் - இதில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமி பி, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளன. கொழுப்புகளுக்கு எதிராக இவை அதிகம் செயல்படுகின்றன. 

காலே - முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம்- இதில் வைட்டமின், தாதுக்களுடன் ஆன்டி- ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. 

வாழைப்பழம் - இதில் பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்து உள்ளது. உடலுக்கு ஆற்றலை எளிதில் தரக்கூடியது.

கீரைகள் - இதில் வைட்டமின் சி, போலேட், இரும்புச் சத்து அதிகம் உள்ளது. 

பேரீச்சம்பழம் - கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க், இரும்புச் சத்து அதிகம் உள்ளது. 

சியா விதைகள் - உடல் கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின், தாதுக்கள், புரோட்டீன், நார்ச்சத்து அதிகம் உள்ளன. 

முட்டை - புரோட்டீன் அதிகம் உள்ள உணவு. 

இந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக உடலில் கொழுப்புகள் படிப்படியாகக் கரைந்து உடல் எடை குறைய அதிகம் வாய்ப்புள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இத்துடன் முடிந்த அளவு லேசான உடற்பயிற்சிகளைச் செய்வது விரைவில் நல்ல பலனைத் தரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com