பசு நெய் - எருமை நெய் எது நல்லது?

நெய் சரியான அளவில் உட்கொண்டால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
 பசு நெய் - எருமை நெய் எது நல்லது?

சரியான அளவில் நெய்யை உட்கொண்டால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. அதனால்தான் இதை உணவில் சேர்த்துக்கொள்ளவும், வெறும் வயிற்றில் சாப்பிடவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் சந்தையில் பல வகையான நெய்கள் கிடைக்கும் நிலையில், ஆரோக்கியமானதை தேர்ந்தெடுப்பது கடினமாக உள்ளது.

பசு நெய்

* இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளது.

* வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கால்சியம் நிறைந்தது.

* குறைந்த கொழுப்பு உள்ளது.

*குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உடல் எடையை குறைக்கவும், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.

எருமை நெய்

* இது வெள்ளை நிறத்தில் உள்ளது

* பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்தது

* இதில் அதிக கொழுப்பு உள்ளது.

*எருமை நெய் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்கவும், எடை அதிகரிக்கவும் உதவுகிறது.

பசு நெய்யில் வைட்டமின்கள் ஈ உள்ளதால் மூளை செயல்பாடு, கண் பார்வை, சருமத்திற்கு நன்மை அளிக்கிறது. ஆயுர்வேத சிகிச்சைக்கு அதிகளவில் பசு நெய் பயன்படுத்தப்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு, கார்டியோ வாஸ்குலார் தசை செயல்பாடுகள் போன்ற உடல் செயல்பாடுகளை மேம்படுத்த எருமை நெய் பயன்படுகிறது.

எந்த வகை நெய்யாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை மேற்கொண்டு உட்கொள்வது சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com