தக்காளி கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கும் வழிமுறைகள்

கடும் விலை உயர்வு காரணமாக, தக்காளி விலை இன்றைய நாளிதழ்களில் முதன்மைச் செய்தியாக மாறியிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை ரூ.100 எட்டிவிட்டது.
தக்காளி கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கும் வழிமுறைகள்


கடும் விலை உயர்வு காரணமாக, தக்காளி விலை இன்றைய நாளிதழ்களில் முதன்மைச் செய்தியாக மாறியிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை ரூ.100 எட்டிவிட்டது.

இந்திய சமையலறைகளில் மிக முக்கியமான பொருள்களில் தக்காளியும் ஒன்று. ரசம் முதல் எந்த குழம்பாக இருந்தாலும் பெரும்பாலும் தக்காளி இல்லாமல் வாய்ப்பே இல்லை. அதுபோலத்தான் தேங்காய் சட்னி போன்றவை தவிர்த்து மற்ற சட்னிகளுக்கும் தக்காளி அவசியம்.

கடுமையான வெயில் மற்றும் கனமழை காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்துக் குறைத்து விலை அதிகரித்துள்ளது.

பலரும் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று யூடியூப்பில் விடியோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும், பொன் போல காசு கொடுத்து வாங்கி வரும் தக்காளியை கெட்டுப்போகாமல் நல்ல விதத்தில் பாதுகாக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தானே.

பொதுவாக தக்காளியை குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டாம் என்கிறார்கள். தேவையான அளவுக்கு தக்காளி வாங்கி வந்து, அதனை அறையின் வெப்பநிலையிலேயே வைத்திருக்கலாம். நன்கு பழுத்திருக்கும் தக்காளியை முதலில் பயன்படுத்த வேண்டும். நிறைய தக்காளி பழுத்திருந்தால் அவற்றை மட்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்து முதலில் அவற்றை பயன்படுத்தலாம்.

தக்காளியை வாங்கி வந்ததும், அதனை குழந்தையைக் குளிப்பாட்டுவது போல மெல்ல கழுவி, நல்ல துணியால் துடைத்துவிட்டு, ஒரு கூடையில் வைத்துப் பாதுகாக்கலாம்.

இது பலருக்கும் தெரிந்திருக்கும் டிப்ஸ்தான். அதாவது, தக்காளியின் காம்புப் பகுதியை மேல் பக்கமாக வைக்கலாமல், கீழ்ப்பக்கமாக இருக்கும்படி தக்காளியை அடுக்கி வைக்கலாம். இதனால் தக்காளி விரைவாக கெட்டுப்போகாது. அறை வெப்பநிலையிலோ அல்லது குளிர்பதனப் பெட்டியிலோ இப்படியே வைப்பது நல்லது, சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு வேளை அதிக நாள்கள் தக்காளியை வைத்திருக்க வேண்டும் என்றால், நன்கு பழுத்த தக்காளிகளை விட சற்று பச்சை நிறத்தில் இருக்கும் தக்காளியாகப் பார்த்து வாங்கி வந்து அறை வெப்பநிலையிலேயே வைத்திருந்தால் கூட ஒரு வாரத்துக்கு தாங்கும். அறை வெப்பநிலையில் அதிக ஈரப்பதம் இல்லாமல் இருத்தல் நலம்.

தக்காளி வைத்திருக்கும் பெட்டியை தினந்தோறும் சோதனை செய்வது அவசியம். ஒரு தக்காளியை மட்டும் எடுத்துக் கொண்டு அப்படியே வைத்துவிடலாமல், வைத்திருக்கும் மற்ற தக்காளிகள் எப்படிஇருக்கின்றன. ஏதேனும் ஒன்று அழுகும் நிலையில் இருக்கிறதா என்பதை கவனித்து, விரைவாக பழுத்திருக்கும் தக்காளியை முதலில் எடுத்துவிட்டால் அல்லது அழுகிய தக்காளியை எடுத்துவிட்டால் மற்ற தக்காளிகள் தப்பிக்கும்.

சிலர் தக்காளியை துண்டுத் துண்டாக நறுக்கி, அதனை ப்ரீசரில் வைத்து பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூன்று நான்கு மாதங்கள் வரை கூட பயன்படுத்தலாம் என்கிறார்கள். சிலர், தக்காளியை மிக்ஸியில் போட்டு அடித்து பேஸ்ட் செய்து குளிர்பதனப் பெட்டியில் வைத்து 10 - 15 நாள்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com