மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா? - நம்பிக்கையும் உண்மையும்!

புற்றுநோய் குறித்த பல தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் தில்லி புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோயியல் மருத்துவர் டாக்டர் பிரக்யா சுக்லா. 
மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா? - நம்பிக்கையும் உண்மையும்!

புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது, புற்றுநோய்களுக்கு வளர்ந்த நாடுகளில் மட்டும்தான் சிகிச்சை பெற முடியும், பெண்களுக்கு மட்டும்தான் மார்பகப் புற்றுநோய் ஏற்படும். 

இவ்வாறு புற்றுநோய் குறித்த பல தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் தில்லி புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோயியல் மருத்துவர் டாக்டர் பிரக்யா சுக்லா. 

புற்றுநோய் ஏற்பட்டால் மரணம்தான் நிகழும், வளர்ந்த நாடுகளில் மட்டுமே இதற்கு சிகிச்சையளிக்க முடியும்

அனைத்து புற்றுநோய்களும் வேறுபட்டவை. ஒரே புற்றுநோயின் வெவ்வேறு நிலைகளில்கூட கணிப்புகள் மாறுபடும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் ஏறக்குறைய அனைத்து புற்றுநோய்களும் குணப்படுத்தக்கூடியவை.

ஆரம்ப நிலை புற்றுநோய்க்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிகிச்சை பெறலாம். ஆனால், முற்றிய புற்றுநோய்க்கு இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ சிகிச்சையளிக்க முடியாது. அதேநேரத்தில் இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சை, உலகளவில் உள்ள சிகிச்சைகளுக்கு இணையாக உள்ளது.

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும்

ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும். ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் விகிதம் 3% என்ற அளவில் உள்ளது. மார்பகப் புற்றுநோய்க்கு பெண்களுக்கு என்ன சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறதோ அதுவேதான் ஆண்களுக்கும். மேலும் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வலியற்ற கட்டிகள்தான் உருவாகும். 

சிகிச்சையின்போது புற்றுநோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அவசியம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புறநோயாளிகள் அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனெனில் புற்றுநோய் சிகிச்சையின்போது நோயாளிகள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com