நீங்கள் சிங்கிளா? பணத்தை சேமிக்கும் 10 வழிகள்!

பணம்... இன்று அனைவருக்கும் அத்தியாவசியத் தேவையான ஒன்று. அடிப்படைத் தேவைகளுக்காகவும் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்காகவும் பணம் தேவைப்படுகிறது. 
நீங்கள் சிங்கிளா? பணத்தை சேமிக்கும் 10 வழிகள்!

பணம்... இன்று அனைவருக்கும் அத்தியாவசியத் தேவையான ஒன்று. அடிப்படைத் தேவைகளுக்காகவும் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்காகவும் பணம் தேவைப்படுகிறது. 

நன்றாக பணம் சம்பாதித்து அதனை ஓரளவு சேமித்து வைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேநேரத்தில் அதிகமாக பணம் சம்பாதித்து தேவையில்லாத வழியில் செலவழித்து கடன் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். 

குடும்பப் பொறுப்புகள் அதிகம் இருக்கும் ஒருவருக்கு சேமிப்பு என்பது சற்று கடினம்தான். எதிர்பாராத செலவுகள் பணத்தை சேமிக்கவிடமால் தடுத்துவிடும். 

ஆனால் சிங்கிளாக இருப்பவர்கள், பெரிதாக குடும்பப் பொறுப்பு இல்லாதவர்கள் பணத்தை எளிதாக சேமிக்கலாம். எப்படி? 

பட்ஜெட்: உங்கள் வரவு செலவு குறித்த ஒரு பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும். நீங்கள் எதற்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை நீங்களே தெரிந்துகொள்ள இது உதவும். 

குறிக்கோள்: அடுத்து வாழ்க்கையில் எதாவது குறிக்கோளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். வங்கியில் பணம் சேமிப்பு அல்லது ஒரு வீடு வாங்க வேண்டும், ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று முதலீட்டுக்கான திட்டத்தை வைத்திருந்தால் அது உங்களை ஊக்கப்படுத்தும். 

செலவை கண்காணித்தல்: சிறிய தொகை செலவு என்றாலும் அதனை எழுதி வைத்துக்கொள்வதால் மாத இறுதியில் தேவையற்ற செலவை கண்டறிந்து அடுத்த முறை அந்த செலவைத் தவிர்க்கலாம்.

வீட்டில் சமையல்: வெளியில் சென்று சாப்பிடுவதால் அதிக செலவு ஏற்படும். எனவே, முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதால் செலவும் குறைவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

ஷாப்பிங்: அவசியமாகத் தேவைப்படும் பொருள்களை வாங்க வேண்டும். தள்ளுபடி என்றாலோ அல்லது விருப்பப்பட்டதாலோ உடனே வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். 

அதுபோல தேவையான பொருள்களை நல்ல தரத்துடன் உள்ள சாதாரண கடைகளிலேயே வாங்கலாம். அதுவும் உங்கள் செலவைக் குறைக்கும். 

மேலும் ஒரு சில கடைகளைத் தேர்வு செய்து விலை, தரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பின்னர் வாங்கலாம். 

சேமிப்பு: சேமிப்பு என்பது எல்லாருக்கும் அவசியமானது. வங்கிக்கணக்கிலோ அல்லது முதலீடு திட்டத்திலோ பணத்தை சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். 

ஆன்லைன் வேண்டாம்: சிறிய செலவுகளுக்குக்கூட இன்று ஜிபே, போன்பே என ஆன்லைன் மூலமாக பணம் அனுப்புவதை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள், இதனால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதே தெரியாமல் போகிறது. எனவே சிறு சிறு செலவுகளுக்கு பணமாக கையில் வைத்துக்கொண்டு செலவு செய்தால் நல்லது. 

சந்தாக்கள்: உடற்பயிற்சி கூடம், ஓடிடி தளங்கள், இணையதள சேவை, கேபிள் டிவி இணைப்பு என மாதம் நீங்கள் செலவு செய்யக்கூடிய சந்தாக்களில் அத்தியாவசியத் தேவையில்லாததை துண்டித்து விடலாம். 

இதையும் படிக்க | ஷவர்மாவில் என்ன ஆபத்து?

அறை பகிர்வு: நீங்கள் சிங்கிளாக ஒரு வீட்டில் இருந்தால் அறைக்கு முழு வாடகையையும் நீங்களே தரவேண்டியிருக்கும். எனவே, உங்கள் நண்பர்கள் யாருடனும் பகிர்ந்துகொண்டால் செலவு குறையும். 

நண்பர்களுடன் அவுட்டிங்: சிங்கிளாக இருப்பவர்கள் பலரும் தினமும் நண்பர்களுடன் வெளியில் செல்வது என்று இருப்பர். இதுதான் உங்கள் சம்பளத்தில் பெரும் தொகையை எடுத்துவிடும். எனவே மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை என திட்டமிட்டு செல்வதுடன் அதற்கான பட்ஜெட்டையும் நிர்ணயித்துக்கொண்டால் சேமிக்க முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com