வைட்டமின் டி நிறைந்த உணவுகள் என்னென்ன?
By DIN | Published On : 21st April 2023 03:09 PM | Last Updated : 21st April 2023 03:09 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
வைட்டமின் டி உடலுக்கு அவசியமான ஒன்று. கொழுப்பில் கரையக் கூடியது. உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின் டி தூக்கத்திற்கும் அவசியமான ஒன்று. வைட்டமின் டி குறைபாட்டினால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பெரும்பாலாக வைட்டமின் டி என்பது சூரிய ஒளியில் மட்டும்தான் கிடைக்கிறது என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், வைட்டமின் டி நிறைந்த உணவுகளும் இருக்கின்றன. சில உணவுகளின் மூலமாக வைட்டமின் டி-யைப் பெறலாம்.
ஏற்படும் பிரச்னைகள்
வைட்டமின் டி குறைவினால் தலைமுடி உதிர்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நரம்புக் கோளாறுகள், தூக்கமின்மை, உடல் பருமனாதல், எலும்புகளில் வலி, மன அழுத்தம், கருவளையம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை ஏற்படலாம்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்!
சாலமன் மீன்
பால்
ஆரஞ்சு
முட்டை மஞ்சள் கரு
பச்சை பட்டாணி
லிவர் ஆயில்
காளான்
சிவப்பு இறைச்சி
சூரை மீன்
தானியங்கள்