டீயுடன் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடலாமா? எதையெல்லாம் சாப்பிடக் கூடாது?

டீயுடன் நொறுக்குத் தீனிகளை சேர்த்து சாப்பிடலாமா? எந்தெந்த உணவுப் பொருள்களை சேர்த்து சாப்பிடக்கூடாது.. நிபுணர்கள் கூறுவதென்ன? 
டீயுடன் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடலாமா? எதையெல்லாம் சாப்பிடக் கூடாது?

டீ அல்லது தேநீர் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு எனர்ஜி ட்ரிங்க். ஒரு நாள் ஆரம்பிப்பது முதல் முக்கிய நிகழ்வுகளை டீ குடித்துக் கொண்டாடுபவர்கள் பலர். 

அந்தவகையில் டீயுடன் சேர்த்து மொறுமொறு பக்கோடா, சமோசா, வடை, காரச்சேவு, மிக்ஸர் என்று சாப்பிடுபவது பெரும்பாலானோருக்கு வழக்கமான ஒன்றாக இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பல இளைஞர்கள், டீயும் வடையும்தான் பல நேரங்களில் காலை உணவாக இருப்பதாகக் கூறுகிறார்கள். 

டீயுடன் இந்த நொறுக்குத் தீனிகளைச் சேர்த்து சாப்பிடலாமா? எந்தெந்த உணவுப் பொருள்களை டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. நிபுணர்கள் கூறுவதென்ன? 

நொறுக்குத் தீனிகள் பெரிதாக உடல் ஆரோக்கியத்திற்கு பலனளிக்காதுதான். அவற்றைச் சேர்த்து சாப்பிட்டால் உடல் பிரச்னைகள் ஏதும் ஏற்படாது. ஆனால், மூன்று முக்கிய பொருள்களை டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. 

நட்ஸ் 

டீயுடன் சேர்த்து நட்ஸ் சாப்பிடக்கூடாது. டீயில் டானின் என்ற வேதிப்பொருள் உள்ளது. நட்ஸில் இரும்புச்சத்து உள்ளது. இது சேர்ந்தால் செரிமானக்கோளாறை ஏற்படுத்தும். 

பச்சை இலை காய்கறிகள் 

கீரைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள் சேர்த்த உணவுகளை(உதாரணமாக கீரை வடை) டீயுடன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவற்றில் இரும்புச் சத்து இருப்பதால் உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். 

மஞ்சள் 

மஞ்சள் மிகச்சிறந்த கிருமிநாசினி. இந்திய உணவுப்பொருள்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், டீத்தூளுடன் மஞ்சள் சேர்த்து குடிக்கக்கூடாது. இதுவும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com