இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

ஃபேஷியலே வேண்டாம்! தூங்கும் முன் முகத்தில் இந்த எண்ணெய் தடவினால்...!

இரவு தூங்குவதற்கு முன்னதாக சருமத்தில் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

Published On :

சரும அழகிற்காக மெனக்கெடுபவர்கள் இன்று அதிகம் இருக்கும் சூழ்நிலையில் பலரும் இன்று இயற்கை வழியில் அதனை மேம்படுத்த முயற்சிக்கின்றனர். 

அந்தவகையில், சருமம் ஆரோக்கியமாக பளபளப்பாக இருக்க வைட்டமின்கள் நிறைந்த பாதாம் எண்ணெய் முக்கியமான பொருள் என்று கூறலாம். 

குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்னதாக சருமத்தில் பாதாம் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

பாதாம் எண்ணெய் என்ன செய்யும்?

பாதாம் எண்ணெயில் பேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் இ இருப்பதால் இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும். 

ஆன்ட்டி- ஆக்சிடன்ட் நிறைந்தது, சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது, சுருக்கத்தையும் குறைக்கிறது. 

Story image

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. கரும்புள்ளிகளை அகற்றுகிறது. 

சருமத்தில் நோய்த்தொற்றுகளை அல்லது அழற்சியை சரிசெய்து சருமத்தை மிருதுவாக்கும். 

கண்களின் கீழ் உள்ள கருவளையத்தை படிப்படியாகக் குறைக்கும். கண்களின் கீழ் உள்ள வீக்கங்களும் தீர்வாக இருக்கும். 

மேக்அப் ரிமூவராகவும் பயன்படுகிறது. வடுக்கள், தழும்புகளையும் குறைக்கும். 

ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அமிலங்கள் இருப்பதால் ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும். 

இரவு தூங்குவதற்கு முன்பு தடவும்போது உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.