பதின் வயதினரின் சமூக ஊடகப் பயன்பாட்டில் யூட்யூப் முதலிடம்! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பதின் வயதினரின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டில் யூட்யூப் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  
பதின் வயதினரின் சமூக ஊடகப் பயன்பாட்டில் யூட்யூப் முதலிடம்! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பதின் வயதினரின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டில் யூட்யூப் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்று அனைத்துத் தரப்பினரிடமும் பெருமளவில் அதிகரித்துவிட்டது. அதிலும் பதின் வயதினர், இளைஞர்கள் அதில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்றே கூறலாம். 

சமூக ஊடகங்களின் பயன்பாட்டினால் இளைஞர்களிடையே மன அழுத்தம் உள்ளிட்ட விளைவுகள் அதிகரித்தாலும் அதன் பயன்பாடு என்னவோ குறைந்தபாடில்லை. பியூ ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வும் இதைத்தான் கூறுகிறது. 

கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 23 வரை 13 முதல் 17 வயதுடைய 1,453 பதின்ம வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சில முக்கிய முடிவுகள் தெரியவந்துள்ளன. அதன்படி, பதின்ம வயதினரில் ஆறில் ஒருவர் யூட்யூப், டிக்டக் ஆகிய இரண்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளது.

பதின் வயதினரில் 71% பேர் தினமும் யூட்யூப் பயன்படுத்துகின்றனர். இதில் 16% பேர் தொடர்ச்சியாக அதில் இருக்கின்றனர். 

17% பேர் டிக்டாக்கிலும் 14% பேர் ஸ்னாப்சாட்டிலும் 8% பேர் இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து இருக்கின்றனர். 

பதின்ம வயதினரிடையே யூட்யூப் மிகவும் பிரபலமான சமூக தளமாக உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 93% யூட்யூப்பை பயன்படுத்துவதாக பதிலளித்துள்ளனர். 2022ல் இதன் எண்ணிக்கை 2% குறைந்திருந்தது. டிக்டாக், ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றும் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

பதின்ம வயதினரின் பேஸ்புக் பயன்பாடு 2014-15ல் 71% ஆக இருந்த நிலையில், 2023ல் 33% ஆகக் குறைந்துள்ளது. தற்போது பதின்ம வயதினரில் 19% பேர் மட்டுமே பேஸ்புக்கை தினமும் அல்லது அடிக்கடி உபயோகிப்பதாகத் தெரிவித்தனர். வெறும் 3% பேர் தொடர்ந்து பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். 

குறிப்பாக இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தவும் தக்கவைக்கவும் சமூக ஊடகங்கள் சிறப்பு நுட்பங்களை கையாள்கின்றன. 

நியூயார்க் மற்றும் கலிபோர்னியா உள்பட 33 மாகாணங்கள் இணைந்து கடந்த அக்டோபரில் இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு சமூக ஊடகங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை காரணமாக உள்ளதாக மெட்டா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com