தண்ணீர் விட்டான் கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?
By DIN | Published On : 16th January 2023 03:35 PM | Last Updated : 16th January 2023 03:35 PM | அ+அ அ- |

தண்ணீர் விட்டான் கிழங்கு தமிழகத்தின் பல இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கிழங்கை நன்கு கழுவி, உலர்த்தி பொடி செய்து சாப்பிடலாம். நாட்டு மருந்துக் கடைகளிலும் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி கிடைக்கிறது.
தண்ணீர் விட்டான் கிழங்கின் நன்மைகள்:
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
தண்ணீர் விட்டான் கிழங்கில் பொட்டாசியம் உள்ளது. இது இதயம், எலும்புகள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகள் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
புற்றுநோயை எதிர்த்துப் போராட
புற்றுநோயை எதிர்த்துப் போராட தண்ணீர் விட்டான் கிழங்கு உதவுகிறது. எலும்பு, மார்பகம், பெருங்குடல், குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் போன்ற சில வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் இக்கிழங்கு உதவுகிறது.
ரத்த சர்க்கரையை நிர்வகிக்க
தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சிறுநீர் கோளாறைப் போக்க
இதில் உள்ள அதிக அளவு அமினோ அமிலம் இயற்கையான டையூரிடிக் ஆக செயல்படுகிறது. சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது. அதிகப்படியான உப்புகளை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. மேலும் சிறுநீர் சம்மந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் இக்கிழங்கு உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க
தண்ணீர் விட்டான் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது, இதுஉடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இதையும் படிக்க: கொழுப்பைக் குறைக்க பயன்படுத்த வேண்டிய 5 வகை எண்ணெய்கள்!
தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு உடல் பிரச்னைக்கு தகுந்தார்போல் பயன்படுத்திக் கொள்ளாலாம்.