தினமும் பால் குடிப்பது அவசியமா?

குழந்தைகள், பெண்கள் உடலில் கால்சியம் சத்து பெற தினமும் பால் அருந்த வேண்டும் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி, தினமும் பால் அருந்துவது சரியா? 
தினமும் பால் குடிப்பது அவசியமா?
Published on
Updated on
1 min read

குழந்தைகள், பெண்கள் உடலில் கால்சியம் சத்து பெற தினமும் பால் அருந்த வேண்டும் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி, தினமும் பால் அருந்துவது சரியா? 

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் முக்கியமானதாக பால் இருக்கிறது. கால்சியம், புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த பால் குழந்தைகளுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மூளைக்கு அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

ஆனால் வயதான காலத்தில் பால் அருந்தினால் அதில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர். 

ஏனெனில், நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின்படி, ஒரு தம்ளர் பாலில் 5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது ஒருவரின் தினசரி தேவையில் 20% ஆகும். நிறைவுற்ற கொழுப்பு அமிலம் பொதுவாக இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

ஆனால் உண்மையில் உடலுக்கு கால்சியம் சத்து தேவை, அது பாலில் எளிதாகக் கிடைக்கிறது. எலும்புகளை பலப்படுத்த கால்சியம் அவசியம் என்பதால் பால் குடிப்பது அவசியம். பால் குடிக்கவில்லை என்றால், இதில் உள்ள கால்சியம், புரோடீன், வைட்டமின் பி ஆகியவற்றை வேறு உணவுப்  பொருள்கள் மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

அதாவது கால்சியம் பெறுவதற்கு பால் மட்டும் இல்லை, வேறு உணவுப் பொருள்களும் எடுத்துக்கொள்வதன் மூலமாக கால்சியம் பெறலாம். 

பெண் ஒருவர் 35 வயதுக்கு பின்னர் கண்டிப்பாக கால்சியம் உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு. ஏனெனில் பெண்களுக்கு 35 வயதுக்கு பின்னர் எலும்பு சம்மந்தமான நோய்கள் அதிகம் ஏற்படும் என்பதால் தினமும் பால் அருந்தலாம், எதிர் விளைவுகளைத் தடுக்க குறைந்த கொழுப்பு கொண்ட பாலை அருந்தலாம். கண்டிப்பாக 55 வயதுக்கு மேலுள்ள பெண்கள் கால்சியம் அடங்கிய உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 

குழந்தைகளைப் பொருத்தவரை குழந்தைகளின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்காக பால் குடுப்பது அவசியம். 

எனவே, உடலுக்கு கால்சியம் அவசியம் என்பதால் பால் எளிதாகக் கிடைக்கும் என்பதால் தரமான கொழுப்பு குறைந்த பாலை அருந்தலாம். அதேநேரத்தில் வேறு உணவுகள் மூலமாக கால்சியம் கிடைக்கும்பட்சத்தில் பாலைத் தவிர்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com