நம்பிக்கையும் உண்மையும்: மன அழுத்த மருந்துகள் போதைப்பொருளா? எவ்வளவு நாள்களுக்கு சாப்பிடலாம்?
By DIN | Published On : 26th September 2023 05:48 PM | Last Updated : 26th September 2023 06:04 PM | அ+அ அ- |

மன அழுத்தத்தைப் போக்க வழங்கப்படும் மருந்துகள் போதைப்பொருளா? அவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டுமா? ஒருமுறை எடுக்கத் தொடங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா?
மன அழுத்த மருந்துகள்/மாத்திரைகள் (antidepressantsx-ஆண்டிடிப்ரசண்ட்ஸ்) குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் டாக்டர் ஆர். ஜெயசீலன்.
மன அழுத்த மருந்துகள் போதைப்பொருளாக இருக்கலாம்.
மன அழுத்தத்தைப் போக்குவதற்கு வழங்கப்படும் மருந்துகள் போதைப்பொருள் இல்லை. ஆனால் திடீரென இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறிகள் சில நாட்களில் சரியாகிவிடும்.
மன அழுத்த மருந்துகளை எடுக்கத் தொடங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்.
ஒவ்வொரு நபரைப் பொருத்தும் சிகிச்சையின் காலம் மாறுபடும். சிலருக்கு இது நீண்ட காலத் தேவையாக இருக்கலாம். சிலருக்கு குறுகிய காலம் தேவைப்படலாம். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே மன அழுத்த மருந்துகளை நிறுத்த வேண்டும்.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளைக் கொடுக்காதீர்கள்!!
மன அழுத்த மருந்துகளை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துவது சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.
இது தவறானது. எனினும் எந்தவொரு மருந்தையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும்போது வழக்கமான பரிசோதனைகளைச் செய்வதும் பக்கவிளைவுகளைக் கண்காணிப்பதும் அவசியம்.
மன அழுத்த மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை
கண்டிப்பாக தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒழுங்கற்ற முறையில் மருந்துகளை எடுத்துக்கொள்வது பலனளிக்காது.
மன அழுத்த மருந்துகளை உட்கொள்வது ஒருவரின் குணாதிசயங்களை மாற்றும்.
இல்லை. இந்த மருந்துகள் முக்கிய குணாதிசயங்களை மாற்றாது. ஒருவரின் நடத்தை மற்றும் மனநிலை மாற்றங்களைத் தணிக்கவே அவை பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு வழங்கப்படும் மருந்துகள், நோயாளிகளை மனச்சோர்வு அறிகுறிகளில் இருந்து விடுத்து இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகின்றன.
இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா? பரவக்கூடியதா?
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...