நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான் தொற்றுகள் ஏற்படுகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?
food health
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டு நோய்கள் ஏற்படுகின்றன.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தொற்றுகள் எளிதில் ஏற்படும்.

மரபியல் காரணங்களைத் தாண்டி, சில உணவுகளை உட்கொள்வதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

நீர்ச்சத்து

தொற்றுகள் ஏற்படும்போது உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, காய்ச்சிய நீரை அதிகம் பருக வேண்டும்.

மேலும் பழச்சாறு உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

சூப், எலுமிச்சை நீர், தேங்காய் தண்ணீர், இளநீர், கூழ், கஞ்சி சாப்பிடலாம்.

food health
நீங்கள் ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா? அதிகரிக்கும் திடீர் செவித்திறன் இழப்பு! தடுப்பது எப்படி?

ஊட்டச்சத்து உணவுகள்

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தி வலுப்படும். 

பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, குடை மிளகாய், வைட்டமின் கே நிறைந்த கீரைகள் அதிகம் சாப்பிடலாம்.

புரதச்சத்து 

கோழி, மீன், முட்டை, பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்களை வழங்குகின்றன.

food health
மூளையில் சிப்: பார்வையற்றவர்களுக்கு பார்வைத் திறன்! விரைவில்...

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

சாலமன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆளிவிதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகள். இவை அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளன. 

இரும்புச்சத்து

வைரஸ் தாக்குதலில் இருந்து தடுக்கவும் நோயை எதிர்த்துப் போரிடவும் இரும்புச்சத்து அவசியம். இறைச்சி, பீன்ஸ், பருப்பு, கீரை உள்ளிட்டவை உணவில் இடம்பெற வேண்டும்.  

மஞ்சள்

மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதனை அனைத்து வகையான உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம். பாலுடன் மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பப்பாளி 

வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய உதவும் முக்கியப் பொருள் பப்பாளி. இது ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, காயங்களை குணப்படுத்த உதவுகிறது, செரிமானத்தைத் தூண்டுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கங்களை சரி செய்யவும் உதவுகிறது.

மாதுளை, கொய்யா, கிவி உள்ளிட்ட பழங்களும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் கூடாது

பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள், பொருந்தா மற்றும் துரித உணவுகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் எதுவும் இல்லை.

மாறாக இவை உடல் செயல்பாட்டைக் குறைக்கின்றன. எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com