கண் முன்னே இருக்கும்.. காரணம் மட்டும் தெரியாது!

சில பொருள்களில் இருக்கும் குறிப்பிட்ட சில அம்சங்கள் எதற்கு என்று காரணம் அறியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருப்போம்.
கண் முன்னே இருக்கும்.. காரணம் மட்டும் தெரியாது!

பல விஷயங்கள் நம் கண் முன்னே இருக்கும். தினமும் பார்ப்போம். ஆனால் அது ஏன் இருக்கிறது என்று சிலருக்குத் தெரிந்திருக்காது.

அன்றாடம் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருள்களிலேயே நாம் இதெல்லாம் எதற்கு என்று சிலருக்கு காரணம் அறியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருப்போம்.

அப்படி ஒன்றல்ல, இரண்டல்ல நிறைய விஷயங்கள் இந்த உலகில் நிறைந்திருக்கின்றன. அவையெல்லாம் இருப்பதால்தான் பல பொருள்கள் தங்குதடையின்றி பல காலம் நாம் பயன்படுத்த ஏதுவாக உள்ளன.

அப்படி ஒரு சில விஷயங்கள் உள்ளன. நம் கண்முன்னே இருக்கும். ஆனால் நாம் காணாமலும் கண்டும் காணாமலும் இருப்போம். அவை..

பூட்டின் கீழிருக்கும் துளை

பூட்டின் மேலே சாவி போட ஒரு துளை இருக்கும். அதுபோல, பூட்டின் அடிப்பாகத்தில் ஒரு சிறு குச்சி கூட உள் நுழைய முடியாதபடி ஒரு துளை இருக்கும். அது ஏன்? அது ஒரு டிரைன் ஹோல். ஒரு பூட்டுக்குள் எதிர்பாராதவிதமாக விழும் தண்ணீர் அல்லது திரவம் வெளியேறுவதற்காக வைக்கப்பட்டிருப்பதுதான் அந்த சிறு துளை. இந்த துளையின் காரணமாக பூட்டுக்குள் இருக்கும் திரவம் வெளியேறிவிடும். அதனால், பூட்டு பாழாவது தவிர்க்கப்படும். பூட்டுக்குள் தண்ணீர் தேங்கினால் அதனுள் இருக்கும் பாகங்கள் துருப்பிடித்துவிடும் என்பதால் இந்த துளை அமைக்கப்பட்டிருக்கிறது.

பழங்களுக்கு ஸ்டிக்கர் ஏன்?

ஆப்பிள் உள்ளிட்ட சில பழங்களை வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அவற்றை நாம் நீக்கிவிட்டு சாப்பிடுவோம். ஆனால் அந்த ஸ்டிக்கரில் என்ன இருக்கும் என்று பார்த்தால் 3 அல்லது இலக்கங்களில் எண்கள் இருக்கும். அவை அந்த பழத்தின் கோடு என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

ஆம், அது இயற்கை முறையில் விளைந்த பழம், கொட்டை இல்லாத பழம் என அதன் விளைந்த விதம் மற்றும் அதன் குணம் உள்ளிட்டவற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு கோட் எண் கொடுக்கப்பட்டிருக்குமாம். இப்படி உலகம் முழுவதும் பழங்களின் விவரங்களை அறிய 1,500 கோடு வார்த்தைகள் அல்லது பிரைஸ் லூக்அப் கோடுகள் உள்ளனவாம். அதுபோல ஒவ்வொரு வகையான ஆப்பிள்களுக்கும் என ஒரு கோடு வார்த்தை உண்டாம். அவ்வாறு ஆப்பிள்களுக்கு மட்டும் 235 கோடு எண்களும், ஆரஞ்சு பழங்களுக்கு 35 கோடு எண்களும் உள்ளனவாம்.

கீபோர்டில் இருக்கும் அந்த சின்னஞ்சிறு கோடு

நாம் டைப் செய்யும் கம்ப்யூட்டர் கீபோர்டில் இருக்கும் எஃப் மற்றும் ஜே என்ற பட்டன்களில் மட்டும் ஒரு சின்னங்சிறு கோடு இருக்கும். அதனை கவனித்திருப்போம். உணர்ந்திருப்போம். ஏன் என்று சிந்தித்திருக்க மாட்டோம். விடை இதோ.. அதாவது நாம் கீபோர்டை பார்க்காமலேயே, நமது விரல்கள் சரியாக இடங்களில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்யும்வகையில்தான் இந்த கீபோர்டு பம்ப்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

கீபோர்டில் எப்போதும் விரல்கள் ஹோம் கீக்களில்தான் அமர்ந்திருக்கும். அப்போது நமது ஆள்காட்டி விரல்கள் சரியாக எஃப் மற்றும் ஜேவில் இருக்கிறதா என்பதை இந்த பம்ப்ஸ் தொட்டுப் பார்த்தே உறுதி செய்து கொள்ளலாம்.

கோல்ஃப் பந்துகளில் இருக்கும் பள்ளங்கள்

கோல்ஃப் பந்துகள் மற்ற பந்துகளைப் போல வட்டவடிவில் இருக்காமல் சிறு சிறு பள்ளங்கள் கொண்டதாக இருப்பதற்கு, அது காற்றைக் கிழித்துக் கொண்டு வெகு தொலைவுக்குச் செல்ல உதவுகிறதாம். இந்தப் பள்ளங்கள் இல்லாத பந்துகளைக் காட்டிலும் 2 அல்லது 3 மடங்கு அதிக தொலைவுக்கு கோல்ஃப் பந்துகள் பறக்குமாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com