உங்களை நேசிப்பது எப்படி?.. செரீனா வில்லியம்ஸ் சொல்லும் ரகசியம்

'உங்களை நேசிப்பது அவசியம்' என்று தாய்மார்களுக்கு செரீனா வில்லியம்ஸ் ரகசியத்தை உடைக்கிறார்.
உங்களை நேசிப்பது எப்படி?.. செரீனா வில்லியம்ஸ் சொல்லும் ரகசியம்

குழந்தை பேற்றுக்குப் பிறகு, தங்களைத் தாங்களே நேசிப்பது மிகவும் அவசியம் என்று தனது லேட்டஸ்ட் இன்ஸ்டகிராம் பதிவில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

பொதுவாகவே குழந்தைப் பேறும், தாய்மையும் கொண்டாடப்பட வேண்டிய தருணங்கள்தான். வாழ்வில் ஒவ்வொரு பெண்ணும் அடையும் மிகச் சிறந்த அனுபவங்களில் முதன்மையானதாக இருப்பதும் தாய்மைப்பேறுதான்.

ஆனால், இதை வெறும் வாய்மொழியாகச் சொல்லலாமே தவிர உண்மையில் அது வெறும் இனிமையான அனுபவமாக மட்டுமே இருந்துவிடுவதில்லை. உச்சகட்ட மகிழ்ச்சியையும், உச்சபட்ச அழுத்தத்தையும் கொடுப்பதாகவே இருக்கும். இதனை பலரும் அழகாகக் கையாண்டுவிடுவார்கள். ஒருசிலரால் முடியாமல் போகிறது.

இப்படிப்பட்ட நிலையில், செரீனா வில்லியம்ஸ் தனது தாய்மைப்பேறு குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவருக்கு இது முதல் குழந்தை அல்ல. செரீனாவுக்கு இரண்டாவது மகள் பிறந்திருக்கிறார். ஆதிரா ரிவர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் குழந்தையுடன் அவர் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனையான செரீனா, குழந்தைப் பேறு தொடர்பான சில பிரச்னைகளை அனுபவித்து வருவதாகவும் ஆனாலும், முதலில், குழந்தைப் பேற்றுக்குப் பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், உங்களை நீங்களே நேசிப்பதுதான் அவசியம் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

எனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் மாற்றங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு, என் மீது அன்பை செலுத்துவதற்கு நான் கற்றுக்கொண்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவர் பிகினி உடையில் கையில் தனது குழந்தையுடன் கப்பலில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். மேலும், தனது உடலமைப்பு தற்போது புகைப்படத்துக்கு ஏற்றதுபோல இல்லாவிட்டாலும், தன் மீது பால் வாடை வீசும்போதும் கூட தன்னை மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனது புதிய உடலமைப்பை நேசிக்கிறேன். இது ஒரு மாற்றம், ஆனால், இதனை நல்ல மாற்றம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

குழந்தைப் பேறுக்குப் பின்பு பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தால் அவர்களுக்குள் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் இருக்கும் தயக்கம், பிள்ளைகளை நேசிப்பது போல தங்களையும் நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பது என அனைத்துக்கும் ஒரு தீர்வையும் தந்துள்ளார்.

நீங்கள் உங்களை நேசிக்கிறீர்கள் என்பதிலிருந்து இந்த வாரத்தைத் தொடங்குங்கள். இது உங்களை நேசிப்பதற்கும் தொடங்கும். உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று சீரான உடலமைப்பைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com