
கூகுள் பிக்சல் 9 மாடல் மொபைல் போன் ஆகஸ்ட் 13-ல் வெளியாகும் என கூகுள் கடந்த வாரம் அறிவித்துள்ளது. அதே நிகழ்வில் ஆண்ட்ராய்ட் 15 ஓஎஸ்ஸும் இன்னும் பிற கூடுதல் சாதனங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அல்ஜீரியாவில் இருந்து முகமது பயாத் என்பவரின் எக்ஸ் பக்கத்தில் பிக்சல் 9 மாடலின் மாதிரி விடியோ பகிரப்பட்டுள்ளது.
ரோஜா நிறத்தில் இருக்கும் பியோனி மலரின் பெயரை இதற்கும் ஈட்டுள்ள கூகுள் வடிவமைப்பில் முந்தைய மாடல்களில் இருந்து நிறைய மாற்றங்களை செய்துள்ளது. பின்பகுதி கண்ணாடி போல பளபளப்பாகவும் பக்கவாட்டில் தட்டையாகவும் காணப்படுகிறது.
12 ஜிபி ரேம் உடனும் 256 ஜிபி சேகரிக்கும் வசதியுடனும் இந்த போன் வெளியாகலாம். இதற்கு அடுத்த மாடலான பிக்சல் ப்ரோ எக்ஸ்எல் பெரிய ஸ்கிரீன் மற்றும் பேட்டரி கொள்ளளவுடன் வெளிவரலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வேகமாக இயங்கவும் வெப்பநிலை கட்டுப்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் கூகுளின் ஜி4 சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய இயலவில்லை. விடியோவில் போன் ஆன் செய்து காண்பிக்கப்படாததால் இது மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.