
இந்தியாவில் உருவான மைக்ரோ பிளாக்கிங் சமூக வலைத்தளமான ‘கூ’ பல நிறுவனங்களுடனான இணைப்பு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து பொதுமக்களுக்கான தனது சேவைகளை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூ தளத்தின் நிறுவனர்கள் அபர்மேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா லிங்க்ட்இன் தளத்தில் வெளியிட்ட பதிவில், பல மிகப்பெரும் இணையதள, தொழில்நுட்ப மற்றும் ஊடக தளங்களுடன் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொண்டோம். இதன் விளைவு நாங்கள் எதிர்பார்த்தது போல இல்லை. மக்கள் உருவாக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளத்தின் இயல்பான கூறுகள் அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. சிலர் முன்னுரிமையை மாற்றி ஒப்பந்தத்தின் இறுதி வரை வந்தபோதும் ஒப்பந்தம் எட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
60 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட ’கூ’ நிறுவனம் அதன் பயனர்கள் அதிகரிப்பிலும் வருவாய் ஈட்டுவதிலும் சாவல்களை எதிர்கொண்டது.
பிப்ரவரியில் ஊடக நிறுவனமான டெய்லிஹண்ட், கூ தளத்தை வாங்க பேச்சுவார்த்தை நடந்ததாக டெக்கிரஞ்ச் தெரிவித்துள்ளது.
வரவேற்புமிக்க காலத்தில் 21 லட்சம் தினசரி உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு இருந்ததாகவும் மாதந்தோறும் 1 கோடிக்கு அதிகமானோர் கூ செயலியை பயன்படுத்தியதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ல் இந்தியாவில் டிவிட்டர் பயன்பாட்டை முறியடிக்கும் தூரத்தில் கூ பயணித்ததாக அதன் நிறுவனர்கள் குறிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.