
லண்டனை மையமாக கொண்ட நத்திங் மொபைல் தயாரிப்பாளரின் துணை நிறுவனமான சிஎம்எஃப் தனது விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சிஎம்எஃப் தயாரிப்புகளின் இணைய, அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் ராஷ்மிகா இடம்பெறவுள்ளார்.
இது தொடர்பாக நத்திங் இந்தியாவின் தலைவர் விஷால் போலா, ராஷ்மிகாவை சிஎம்எஃப் குடும்பத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சிஎம்எஃப்பின் தனித்துவத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அவரது வருகை இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக பட்ஸ் ப்ரோ 2 என்கிற இயர் பட்ஸையும் வாட்ச் ப்ரோ 2 என்கிற ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்தவுள்ளது சிஎம்எஃப்.
சிஎம்எஃப் போன்- 1 மாடலின் வடிவமைப்பை வெளியிட்டுள்ள நிறுவனம், ஜூலை 8-ம் தேதி முதல் போன் சந்தையில் கிடைக்கும் என அறிவித்துள்ளது.
சிஎம்எஃப் போன், 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 8ஜிபி ரேம் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடன் ரூ.20 ஆயிரம் மதிப்பில் வெளியாகும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.