மெட்டா (முன்னர் பேஸ்புக்) குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் திரெட்ஸ் செயலி பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா- அதிகம் செயல்பாட்டில் உள்ள பயனர்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி, பிரபலங்கள் சார்ந்த உரையாடல்கள், விளையாட்டு ஆகிய தலைப்புகள் பிரபலமாக உள்ளதாகவும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 17.5 கோடி செயல்பாட்டில் உள்ள பயனர்களை மெட்டா கொண்டுள்ளதாக அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார்.
உலக சராசரியை காட்டிலும் இந்திய பயனர்கள், இன்னொரு பயனரை பதிவுகளில் குறிப்பிடுவதும் (மென்ஷன்) மற்றும் தங்கள் பதிவுகளில் விடியோக்கள் பயன்படுத்துவதும் அதிகம் எனக் குறிப்பிடப்படுகிறது.
குறுகிய உரை (டெக்ஸ்ட்) பதிவுகளை இடுவதற்கான தளமாக உருவாக்கப்பட்ட திரெட்ஸ், உரையோடு சேர்த்து படங்கள் மற்றும் விடியோக்களை பகிரும் வசதியை அளிக்கிறது.
நான்கில் ஒரு பதிவு புகைப்படத்துடன் இடப்படுவதாகவும் புகைப்படங்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாகவும் திரெட்ஸ் இருப்பதாக மெட்டா அறிக்கை குறிப்பிடுகிறது. நேரடியாக திரெட்ஸில் மொபைல் கேமரா அணுகி படம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது திரெட்ஸ் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பயனர்களின் விருப்பத்திற்கேற்ப தலைப்புகளை காண்பிக்க திரெட்ஸ் செயலி வடிவமைக்கப்படுவதாகவும் மக்கள் தங்களின் ஐடியாக்கள் மற்றும் சிந்தனைகளை பகிர வசதியான தளமாக மாற்ற முயற்சிப்பதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயனா்களை அடிமையாக்கும் அம்சங்களை மெட்டா முடக்க வேண்டும்!

வாட்ஸ்ஆப் யூஸர்நேம்: மெட்டா நிறுவனம் அளித்த பதில்; மத்திய அரசு பரிசீலனை?

வாட்ஸ்ஆப்பில் யூஸா்நேம் விவகாரம்: மத்திய அரசு அதிகாரிகளுடன் மெட்டா குழு சந்திப்பு







