'சிரிப்புக் கோளாறு' என்றொரு பிரச்னையா? நடிகை அனுஷ்காவின் அவதி அனுபவம்!

நடிகை அனுஷ்கா, சில காலத்துக்கு முன்பு தனக்கு சிரிப்புக்கோளாறு இருந்தாகக் கூறியிருந்தார்.
அனுஷ்கா ஷெட்டி (கோப்புப் படம்)
அனுஷ்கா ஷெட்டி (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த முன்னணி நடிகை அனுஷ்கா, தனக்கு சில காலத்துக்கு முன்பு, அரிதிலும் அரிதான சிரிப்புக் கோளாறு இருந்ததாக பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதாவது சிரிக்கவோ அல்லது அழவோ தொடங்கிவிட்டால், அதனை தன்னால் கட்டுப்படுத்தவே முடியாது என்றும் கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்கள் வரை அது நீடிக்கும் என்றும், பிறகு உடல் களைப்பாகி தானாக நிற்கும் என்று தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தொலைக்காட்சியில் நகைச்சுவையைப் பார்த்தால் நான் தரையில் விழுந்து சிரிப்பேன், இதுபோல படப்பிடிப்புகளின்போது சிரிக்கத் தொடங்கிவிட்டால் அதனை நிறுத்தவே முடியாது. இதனால், ஆரம்பத்தில் பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று அவர் அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டி (கோப்புப் படம்)
அமெரிக்காவுக்கு 'பிராண்டட்' பொருள்களின் டூப்ளிகேட்களை கொண்டு செல்லாதீர்கள்!

சிரிப்புக் கோளாறு நோயை 'சூடோபுல்பார்' (Pseudobulbar affect) என்று அழைக்கிறார்கள். வழக்கமாகவே ஒரு நகைச்சுவைக்கு சிலர் சிரிப்பார்கள். சிலர் சிரிக்கவே மாட்டார்கள். அதுபோலத்தான் இதுவும். சிலருக்கு நரம்பியல் பிரச்னைகளால் சிரிப்பு ஏற்பட்டுவிட்டால் அதனை நிறுத்த முடியாதாம்.

நரம்பியல் பிரச்னை அல்லது தலையில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்த சூடோபுல்பார் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாம். சில வேளைகளில் நரம்பயில் கடத்தியில் ஏற்படும் சமநிலையின்மையாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறதாம். இதனால், மூளையிலிருந்து நரம்பு வழியாகச் செல்லும் தகவல்களில் பாதிப்பு ஏற்பட்டு, சிரிக்கத் தொடங்கினால், அதனை நிறுத்த முடியாமல் போவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இதற்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை. சிலர், இதனை மனநலப் பிரச்னையுடன் தொடர்புபடுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது தவறு.

மன அழுத்தம் போன்றவற்றுக்கும், சிரிப்புக் கோளாறு நோய்க்கும் தொடர்பில்லை என்றும் இந்த சிரிப்புக் கோளாறு சில நிமிடங்களுக்குத்தான் நீடிக்கும், ஆனால் மன அழுத்தம் என்பது நாள் முழுக்க நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

உண்மையான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சிலருக்கு இது கோளாறு என்பதே தெரியாமல் மருத்துவரை நாடாமல் இருப்பதால், காரணம் மற்றும் கோளாறை குணப்படுத்தும் எண்ணிக்கைக் குறைவாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோல, சிரிப்புக் கோளாறு பற்றிய மற்றொரு நோயும் உள்ளது. அதுதான் ஜெலஸ்டிக் சீய்சர்ஸ் அல்லது சிரிப்புப் பிரச்னை.

ஒருவர் சிரிக்கும்போது, அருகில் இருப்பவருக்கும் அது தொற்றிக்கொள்ளும்தான். ஆனால், சிரிப்பிலும் ஒரு அரிய நோய் இருப்பதாகவும், 2 லட்சம் பேரில் ஒருவருக்கு அந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறும்போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இந்த சிரிப்பு நோய் பற்றி மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், சில நேரங்களில் இது குழந்தை பருவத்திலேயே ஏற்படுவதாகவும், சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மூளையின் ஹைபோதாலமஸ் எனப்படும் ஒரு பகுதியில் ஹமர்டோமா எனப்படும் சிறிய வளர்ச்சியால் (புற்றுநோய் அல்லாத) இந்த நோய் ஏற்படுகிறதாம்.

ஹைபோதாலமஸ் என்பது மூளையின் ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான பகுதி, இது நமது உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்தி, சில அடிப்படை செயல்களை நிகழ்த்துகிறது. 'ஜெலஸ்டிக்' என்ற வார்த்தை 'ஜெலோஸ்' என்பதிலிருந்து வந்தது - இது சிரிப்புக்கான கிரேக்க வார்த்தை. ஆகையால் இந்நோய்க்கு ஜெலஸ்டிக் கோளாறு என பெயரிடப்பட்டுள்ளதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com