பிரிவால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

பிரிவால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி? என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிரிவால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

நெருக்கமான ஒருவரை பிரிவதால் அல்லது இழப்பதால் ஏற்படும் மனநிலை தடுமாற்றம் அல்லது மன அழுத்தமும் கவலைப்பட வேண்டிய ஒரு சிக்கல்தான் அதற்கும் உரிய கவனம் அளிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.

அங்கிதா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது பிரபல வழக்குரைஞராக இருக்கும் இவர், தனது தந்தையை இழந்தபிறகு தன்னில் ஏற்பட்ட சில மாற்றங்களை உணர்ந்துள்ளார். எப்போதும் போல தான் இயல்பாக இல்லை என்பதை அறிந்ததும் மருத்துவர்களை நாடியுள்ளார்.

எனது கணவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயல்வேன். ஒருவேளை அவர் எடுக்கவில்லையென்றால், உடனே புறப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என தேடிச் செல்ல ஆரம்பித்தேன். இதனால், எனது வாழ்க்கையும், வேலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை உணர்ந்தேன். நான் தவறாக நடந்துகொள்கிறேன் என்பதையும் உணர்ந்தேன் என்கிறார் மிகத் தெளிவாக.

இதில் என்ன பெரிய பிரச்னை இருக்கிறது என்று கேட்டால், இருக்கிறது. இதற்கு பிரிவால் ஏற்படும் மனநலக் கோளாறு அல்லது மன நலப் பிரச்னை என்கிறார்கள் மருத்துவர்கள். நமக்கு நெருக்கமான ஒருவரை பிரியும் போது அல்லது இழக்கும் போது அவருக்குள் ஏற்படும் கவலை, பயம் போன்றவற்றின் நெருக்குதல் காரணமாக மனநிலையில் ஏற்படும் கோளாறுதான் இந்த நோய்க்கான காரணி.

ஒரு குழந்தையாக இருந்தால், அதனை 24 மணி நேரமும் தாய் அல்லது ஒருவர் கவனித்துக் கொள்வார். அவர் சில நிமிடங்கள் பிரிந்தாலே குழந்தை அழுதுகொண்டிருக்கும். ஒருவேளை குழந்தை வளர்ந்தபிறகும் இது தொடர்ந்தால் அல்லது பெரியவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை பிரிய முடியாமல் அவதிப்பட்டால் அது ஆங்செய்டி டிஸ்ஆர்டர் என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.

மைன்ட் வெல்நஸ் இந்தியா நிறுவனரும், மனநல மருத்துவருமான டாக்டர் எரா தத்தா அளிக்கும் விளக்கத்தில், உண்மையாகவே இது குழந்தை பருவ நோயறிதலாகவே நாங்கள் கருதுகிறோம், சிலருக்கு இது முதிர்வயது வரை நீடிக்கும்.

குறிப்பாக கடினமான குழந்தைப் பருவம், கவலைகள், பழகுவதில் இருக்கும் சிக்கல்கள் உள்ளவர்கள் போன்றவர்களுக்கும் இது ஏற்படுகிறது.

மனநலக் கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டின் புதிய வழிகாட்டுதல்களின்படி, எந்த வயதிலும் இது கண்டறியப்படலாம். நெருக்கமானவர்கள் பிரிந்து செல்லும்போது, இந்த மனநலக் கோளாறு ஏற்படுகிறது. ஒருவர் பிரிந்து செல்வதால் பயம் அதிகரித்து, செயல்பாட்டு ரீதியாக செயலிழக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

இந்த அச்சம உண்மையானதாகவும் இருக்கலாம் அல்லது கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இருக்கும் இந்த மன நலக் குறைபாடு, இந்த அச்சத்தை மிகப்படுத்துகிறது. இதனால், மனநிலை எப்போதும் ஓர் விழிப்புணர்வுடன் இருக்கும், மற்றவர்களை ஆராய்ந்துகொண்டு, அவர்களைப் பற்றி கண்காணித்துக்கொண்டு, எல்லா இயற்கையான சூழ்நிலைகளையும் மிகைப்படுத்தி அதனால் தனக்கோ அல்லது உடன் இருப்பவர்களுக்கோ ஏதேனும் ஆபத்து நேரிடும் என்ற உணர்வை ஏற்படுத்தி அது மனநல பிரச்னைக்கு அடிகோலும். இது உடல்நலப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள்.

நேசிக்கும் ஒருவர் தொலைவில் இருந்தாலோ அல்லது தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலோ அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். கவலை அடைகிறார்கள், அவர்களது வேலையில் கவனம் செலுத்தமுடியாமல் போகிறது. அல்லது சம்பந்தப்பட்ட நபருடன் அல்லது உடன் இருப்பவர்களுடன் சண்டை போடுவது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால், இதனை ஆரம்பத்திலேயே ஒருவர் கண்டறிந்து அவர்களை அவர்களாலேயே மாற்றிக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். நாம் நினைப்பது சரியா? உண்மையா? என கேட்டு அவ்வாறு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் மனதுக்கு எடுத்துரைப்பது. இல்லை என்பதை உறுதி செய்வது.

ஒருவர் உடன் இல்லாதபோது, அவர் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கார், நம்மை ஏமாற்றவில்லை, அவர் பிரிந்து சென்றாலும் நமக்கு ஏதும் ஆபத்து நேரிடாது என்பதை மனதுக்கு உறுதிப்படுத்துங்கள்.

நன்கு இழுத்து மூச்சுவிடுங்கள். சற்று அமைதியாக இருந்து பார்க்கலாம். அவருடனான நல்ல அனுபவங்களை நினைவுகூர்வது, மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர்வது போன்றவற்றை செய்யலாம்.

உங்களுக்குப் பிடித்த வேலையொன்றில் கவனம் செலுத்தி, மனச்சிதறலைத் தவிர்க்கலாம்.

எதிர்மறையான எண்ணங்களை விலக்குங்கள். அவற்றுக்கு நம்பிக்கையோடு பதிலளித்து திசைதிருப்புங்கள். நம்பத்தகுந்தவர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு ஏற்படும் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முடியாவிட்டால் மனநல நிபுணரின் உதவியை நாடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com