
பொதுவாக குளிர் காலத்தில்தான் உதடுகள் வறட்சியடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம். ஆனால், கோடையிலும் லிப் பாம் அவசியம் என்கிறார்கள்.
குளிர்காலத்தில் உதடுகள் வறண்டுபோவதால் பலரும் லிப் பாம் போட மறப்பதில்லை. ஆனால், கோடையிலும் இந்த பிரச்னை இருக்கும். எனவே மறக்காமல் போடுங்கள் என்பதே அறிவுரையாக உள்ளது.
ஆனால், கோடைக்காலத்தில் பயன்படுத்தும் லிப் பாம் போல அதிக அடர்த்தியானதாக இல்லாமல், லேசான, சூரிய வெப்பத்திலிருந்து காக்கும் லிப் பாம்களை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என்றும் கூறுகிறார்கள்.
கேரமைட், ஹையாலரோனிக் ஆசிட் போன்றவை சேர்ந்த லிப் பாம்கள் நன்று வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
சூரியனிடமிருந்து காத்துக் கொள்ள மிகவும் முக்கியம். உடல் திடீரென தண்ணீர் வறட்சியால் வறண்டுபோகும்போது அது நேரடியாக எதிரொலிப்பது உதட்டில்தான். எனவே, வறட்சியமையாமலும், வெயிலில் வெளியே வரும்போது சூரிய கதிர்களால் கருப்பாகாமலும் காக்க உதவுகிறது.
வெப்பக் காற்றினாலும் உதடுகள் பாதிக்கப்பட்டு வெடிப்பு விடும் அபாயம் இருப்பதால், காற்றிலிருக்கும் காக்க லிப் பாம் உதவுகிறது.
வயோதிகத்தை முதலில் சொல்வது உதடுகளும் சருமமும்தான். எனவே, அவற்றை நல்ல முறையில் பராமரித்தால்தான் என்றும் இளமையாக திகழ முடியும்.
மேலும் உதடுகளின் பராமரிப்பில் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவுக்கும் முக்கியத்துவம் பெறுவதால், கோடைக்கு தண்ணீர் அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்வது நலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.