பெண்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

மருத்துவர்களிடம் சென்று இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குளையும், மாத்திரைகளையும் வாங்கி சாப்பிடுவதை விட....
பெண்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களின் உடலில் இயற்கையாகவே எச்.பி கவுன்ட் எனப்படும் ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சராசரியாக பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இல்லையெனில் மயக்கம், சோர்வு, உற்சாகமின்மை, முடி உதிர்வது போன்ற பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

அத்தகையவர்கள் மருத்துவர்களிடம் சென்று இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குளையும், மாத்திரைகளையும் வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், கீரைகள் உள்ளிட்ட உணவு வகைகளை அன்றாடம் தங்களது உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை தானாகவே உயரும்.

பெண்கள் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில உணவுப் பொருள்கள்..

* முருங்கைக்கீரை (பொரியல், கூட்டு செய்து சாப்பிடலாம்)

* சுண்டைக்காய் (காயாகவும், வற்றல் செய்தும் உணவில் சேர்க்கலாம்.)

* சிவப்பு முக்கடலை (நாட்டு முக்கடலை)

* பாசிப்பயறு (அவித்தோ முளைக்கட்டியோ சாப்பிடலாம்)

* மணத்தக்காளி வற்றல்

* எள்ளுருண்டை

* அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை

* கருப்புத் திராட்சை (விதை நீக்கியது அல்ல), நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீச்சை

* கறிவேப்பிலைத் துவையல்

* பீர்க்கங்காய் (இதைக் குழம்பு, பொரியல், கூட்டு, துவையல் எனப் பலவிதமாகப் பயன்படுத்தலாம்)

* பிரண்டை (புளி சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்)

* முள்ளங்கி (சாறு எடுத்தும் சூப் செய்தும் அருந்தலாம், பொரியல், அவியல் செய்தும் சேர்க்கலாம்)

* பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி

* உளுந்து, கேழ்வரகு தோசை

* பொன்னாங்கன்னி கீரை, தண்டுக்கீரை அல்லது முளைக்கீரை

* மலைநெல்லிக்காய்ச் சாறு

* பனைவெல்லப் பாகில் புரட்டிய சிறு தானிய மாவுருண்டை

* வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com