
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் திங்கள்கிழமை அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தயாரிப்பான சாட்ஜிபிடியின் புதிய வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
சாட்ஜிபிடியின் புதிய வெர்சனான ஜிபிடி- 4ஓ இதுவரை வெளிவந்த வெர்சன்களில் அதிநவீனமாக இருப்பதுடன் மனிதர்களைப் போலவே பதிலளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூகுளின் ஐ/ஓ 2024 மாநாட்டுக்கு ஒருநாள் முன்னதாக நடத்தப்பட்ட இந்த அறிமுகத்துக்கு பிறகு சாம் ஆல்ட்மேன் பதிவில், “இதுவரை உலகில் கிடைக்கிற சாட்ஜிபிடி வெர்சன்களில் சிறந்த மாடலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். விளம்பரங்கள் அல்லது அதுபோல எதுவுமில்லாமல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓபன்ஏஐ 3.5 வெர்சன் வரை பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கிற நிலையில் நிறுவனம் தொடர்ந்து பில்லியன் கணக்கிலான மக்களுக்கு இலவச சேவையை அளிக்கும் என ஆல்ட்மேன் உறுதியளித்துள்ளார்.
இதுவரை உரையாடல்கள் வழியாக பதிலளித்த சாட்ஜிபிடி குரல் மற்றும் காணொளி உள்ளீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். படங்களில் வருகிற ஏஐ போல உண்மைக்கு நெருக்கமாக செயல்படுவதும் இன்னும் அதிக நுண்ணறிவுடனும் நகைச்சுவை உணர்வுடனும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்யறிவு தொழில்நுட்பத்தில் அடுத்த நிலைகளுக்கு இந்த சாட்ஜிபிடி பயனர்களை அழைத்துச் செல்லும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.